மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சிலி (சாண்டியாகோ) - 2025
6 Dec 2025, 2:48 pm

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி சிலி (சாண்டியாகோ) - 2025

நெதர்லாந்து மீண்டும் கலக்கல்

13-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை புரட்டியெடுத்தது

மகளிர் இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டி யாகோவில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் சிலி உட்பட 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரின் 6ஆவது நாளான சனியன்று நடை பெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - மலேசியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக் கம் செலுத்திய நெதர்லாந்து அணி 13-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி 3ஆவது கால் பகுதியில் மட்டும் 6 கோல்கள் அடித்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா, உருகுவே அணியை வீழ்த்தியது. உருகுவே கால்பந்துக்கு பெயர் பெற்றது என்றா லும், அந்த அணி வீராங்கனைகள் ஓரளவு நன்றாக விளையாடினர். 30 ஆவது லீக் ஆட்டத்தில் சிலி - ஜப்பான் அணிகள் மோதின. சீரான வேகத்தில் அதிரடியாக விளையாடிய ஜப்பான் 3-1 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் உள்ளூர் அணி யான சிலியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மீண்டும் சூப்பர் பார்மில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி

நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவு கள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் (நியூஸிலாந்து) நடை பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னும், தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 167 ரன்னும் எடுத்தன. 64 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 466 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 531 ரன்கள் நிர்ணயம் செய்தது. 531 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின மான இலக்குடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி வெள்ளியன்று 4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பு க்கு 212 ரன் எடுத்து இருந்தது. ஹோப் 116 ரன்னுடனும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 55 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். தொடர்ந்து சனியன்று நடைபெற்ற 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 319 ரன்கள் தேவை மற்றும் கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில், மேற்கு இந்திய தீவுகள் தொடர்ந்து விளையாடியது. ஹோப் 140 ரன்னிலும், அடுத்து வந்த டெவின் இம்லாக் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 277 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. இதனால் மேற்கு இந்திய தீவுகள் அணியை எளிதில் வீழ்ந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் 7ஆவது விக்கெட்டான ஜஸ்டின் கிரீவ்ஸ் - கேமர் ரோச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தினர். ரோச் அரை சதமடிக்க, ஜஸ்டின் கிரீவ்ஸ் (12ஆவது டெஸ்டில் விளை யாடும் இவருக்கு 2ஆவது சதமாகும்) சதமடித்தார். தொடர்ந்து அபாரமாக விளையாடிய கிரீவ்ஸ் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஜஸ்டின் கிரீவ்ஸ் - ரோச் இருவரும் போட்டியை டிரா செய்ய உதவினர். கடைசி நாள் முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக் கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது. தோல்வியடைய வேண்டிய போட்டி யில் பொறுப்புடன் ஆடிய ஜஸ்டின் கிரீவ்ஸ் - ரோச் ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் நீண்ட கால மாக பார்ம் பிரச்சனையில் சிக்கித் தவிக் கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இந்த ஆட்டம் நல்ல பலனை அளிக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.