முந்தய பக்கம்

அரசு ஊழியர் சங்கம் சார்பில்  மகளிர் தின கருத்தரங்கம்

14 Mar 2026, 2:57 pm
அரசு ஊழியர் சங்கம் சார்பில்  மகளிர் தின கருத்தரங்கம்
<p><strong>அரசு ஊழியர் சங்கம் சார்பில் &nbsp;மகளிர் தின கருத்தரங்கம்</strong></p> <p>&nbsp;செங்கல்பட்டு, மார்ச். 14- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் மகளிர் தின கருத்து அரங்கம் செங்கல்பட்டு மாவட்ட சங்க அலுவலகத்தில் மகளிர் துணை குழு அமைப்பாளர் டி.ஜெயசுதா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆ.பேபி வரவேற்றார் மாவட்டத் துணைத் தலைவர் கே.பூங்குழலி முன்னிலை வகித்தார் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கத்தின் மாநில தலைவர் ஜி.பிரமிளா, முனைவர் எம்.எஸ்.குமரவேல் ஆகியோருக்கு கருத்துரை வழங்கினர். மாவட்ட இணை செயலாளர் எஸ்.புஷ்பலதா நன்றி கூறினார். &nbsp;இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வே.விக்டர்சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பயிலரங்கத்தில் மாவட்டச் செயலாளர் சே.வசந்தகுமார் வரவேற்றார் சங்கம் கடந்து வந்த பாதையும் முன்னணி ஊழியர்களின் பங்களிப்பும் என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.முகமது உசேன், ஓய்வூதியம் அதன் வரலாறு நாம் பெற்றதும் நாம் பெற வேண்டியதும் என்ற தலைப்பில் டிஆர்இயூ துணைத் தலைவர் ஆர்.இளங்கோ ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் த. கன்னியப்பன் நன்றி கூறினார்</p>
Share
FacebookXWhatsAppTelegram