அரசு ஊழியர்களின் மகளிர் தின கருத்தரங்கம்
7 Mar 2026, 2:36 pm
<p><strong>அரசு ஊழியர்களின் மகளிர் தின கருத்தரங்கம்</strong></p>
<p>நாகப்பட்டினம்/திருச்சிராப்பள்ளி, மார்ச் 7 - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் சனிக்கிழமை நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலாம்பாள் மற்றும் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் பா.ராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மகளிர் துணைக் குழு உறுப்பினர் நா.மீனாட்சி வரவேற்புரையாற்றினார். மகளிர் துணை குழு உறுப்பினர்கள் என்.அமுதா, த.சசிகலா, த.ஷகிலா, ஜெ.ஜம்ருத்நிஷா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். இந்திய தொழிற்சங்கம் மைய மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பி.குணசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் த.ஸ்ரீதர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அ.தி.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா நிறைவுரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் உணவருந்த மற்றும் ஓய்வெடுக்க இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். அலுவலக நேரத்தில் மகளிருக்கு தனி பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். அலுவலக நேரத்திற்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் பெண்களை அலுவலக வேலை செய்ய நிர்பந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் டி.தனலட்சுமி நன்றியுரை ஆற்றினார். திருச்சிராப்பள்ளி உலக மகளிர் தின கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை திருச்சியில் நடந்தது. கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மகளிர் துணைக் குழு மாவட்ட அமைப்பாளர் கலையரசி தலைமை வகித்தார். மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் ராமலட்சுமி வரவேற்றார். அப்போலோ மருத்துவமனை திருச்சி யூனிட் துணைத் தலைவர் ஜெயராமன் துவக்க உரையாற்றினார். மகளிர் நலன் குறித்து அப்போலோ மருத்துவமனை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் உமா வேல்முருகன் பேசினார். ‘போராட்டக் களத்தில் பெண்கள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொருளாளர் செந்தமிழ்செல்வன் பேசினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மகளிர் துணைக்குழு ரேவதி கருத்துரை வழங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட பொருளாளர் சிவசங்கர், மேனாள் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஜீவானந்தம், பெரியசாமி, சண்முகம், கிழக்கு வட்டக் கழக தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி நிறைவுரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் அல்போன்ஸா நன்றி கூறினார்.</p>
