அவிநாசியில் மகளிர் தின கொண்டாட்டம்
10 Mar 2026, 3:51 pm
<p><strong>அவிநாசியில் மகளிர் தின கொண்டாட்டம்</strong></p>
<p>அவிநாசி, மார்ச் 10- அவிநாசி அருகே வஞ்சிபாளையம் பகுதியில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கேக் வெட்டி ஞாயி றன்று மகளிர் தினத்தை கொண்டாடினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மகளிர் தினத்தை முன்னிட்டு வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் அமைப்பின் தலைவர் சித்ரா, செயலா ளர் கௌரிமணி, ஒன்றியப் பொருளாளர் தங்கமணி, மாவட்டக் குழு உறுப்பினர் செல்வி, சிஐடியு விசைத்தறி மாநில பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் ஹனிபா, வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகி நந்தகோபால், மாணவர் சங்க நிர்வாகி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும், புதுப்பாளையம் ஊராட்சியில் பணியாற்றும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு கதர் ஆடை அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கினர். இக்கூட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.</p>
