பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000 உரிமைத் தொகை வரவு
13 Feb 2026, 3:55 pm
<p><strong>பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.5000 உரிமைத் தொகை வரவு</strong></p>
<p>அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு சென்னை, பிப்.13 - தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகையாக ரூ.3000 மற்றும் கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்ள ரூ.2000 என மொத்தம் ரூ.5000 செலுத்த உத்தர விட்டுள்ள தமிழ்நாடு அரசின் முடிவை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித் திருப்பதாவது: வீட்டை பராமரித்தல், குழந்தை பராமரிப்பு, முதி யோர் கவனிப்பு, உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய வைகளில் பெண்களின் உழைப்பு இந்திய பொருளா தாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தி வரு கிறது. இதுவரை ஊதியமற்ற, கணக்கில் வராத உழைப்பாகவே பெண்களின் உழைப்பு ஒதுக்கப்பட்டு வந்துள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசு பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையை அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வழங்கி, பெண்களின் உழைப்பை அரசு அரசியல் ரீதியாக அங்கீகரித்த முடிவை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வெகுவாக பாராட்டி உள்ளது. பெண்களிடம் பணம் இருந்தால் வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், சேமிப்பு என்ற அடிப்படை தேவை களுக்கே பயன்படுத்தப்படும் என்பது உலகளாவிய அனுபவ உண்மை. தமிழ்நாட்டில் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படத் தொடங்கியதற்குப் பிறகு, பெண்களின் வாழ்க்கையில் சிறு கடன்களிலிருந்து மெதுவாக விடுபடத் தொடங்கியுள்ளனர். குடும்பத்தின் தினசரி செலவுகளில் பெண்களின் முடிவெடுக்கும் அதிகாரம் உயர்ந்துள்ளது. குழந்தைகளின் கல்வி, மருத்துவச் செலவுகள் “கடைசி முன்னுரிமை” என்ற நிலையிலிருந்து முன்னுரிமை பெறும் நிலைக்கு வந்துள்ளதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் சிறிய அளவிலான சேமிப்பை தங்க ளது பெயரில் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கிராமப் புற பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் தொகை உள்ளூர் சந்தைகளில் செலவிடப்படுகிறது. சிறு கடை கள், மருந்தகங்கள், கல்வி தேவைகள், போக்கு வரத்து செலவுகள் ஆகியவற்றின் வழியாக கிராமப் புற பொருளாதாரத்தில் பணச் சுழற்சி அதிகரித்து உள்ளது. குடும்ப வன்முறை, கடன் அழுத்தம், பொரு ளாதார சார்பு ஆகியவை குறையும் போக்கு காணப்படு கிறது. பெண்களின் கைகளில் உள்ள சிறிய தொகை களே பெரிய சமூக மாற்றங்களை உருவாக்குகின்றன. இந்தப் பின்னணியில் தான், இந்தத் திட்டத்தை நீதிமன்றங்களையும் அரசியல் அழுத்தங்களையும் பயன்படுத்தி நிறுத்த முயன்ற சூழலில், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்பணமாக ரூ.5000 வழங்க உத்தரவிட்ட தமிழக முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முடிவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பாராட்டுகிறது. மேலும் பெண்கள் நலன் காக்கும் திட்டங்கள் தடையின்றி, தொடர்ச்சியாக, செயல்படுத்தப்பட வேண்டும் என்று மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கக் கூடிய அனைவருக்கும் உடனடியாக மகளிர் உரிமைத்தொகை வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p> </p>
