முந்தய பக்கம்

பிரசவம் முடிந்த  இரண்டே நாளில்  தேர்வு எழுதிய பெண்

19 Feb 2026, 3:09 pm
பிரசவம் முடிந்த  இரண்டே நாளில்  தேர்வு எழுதிய பெண்
<p><strong>பிரசவம் முடிந்த &nbsp;இரண்டே நாளில் &nbsp;தேர்வு எழுதிய பெண்</strong></p> <p>மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் நகரைச் சேர்ந்தவர் சீத்தல் சந்திர காந்த் சிட்டே (21). திருமணம் மற்றும் இதர பிரச்சனை காரணமாக பள்ளிப் படிப்பை அவர் நிறைவு செய்யவில்லை. &nbsp;இதனால் திருமணம் ஆன பின்பு சீத்தல் 12ஆம் வகுப்பு தேர்வு தற்போது எழுதி வருகிறார். நிறைமாத கர்ப்பிணி யாக 12ஆம் வகுப்பு தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த சீத்தலுக்கு பிப்., 8ஆம் தேதி குழந்தை பிறந்தது. எனினும் தேர்வை கருத்தில் கொண்டு பிரசவம் முடிந்த இரண்டே நாட்களில், பிப்., 12ஆம் தேதி நடைபெற்ற ஆங்கில தேர்வை தனது சகோதரியுடன் வந்து எழுதினார். அப்போது குழந்தையோடு அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது. &nbsp;தொடர்ந்து, புதன்கிழமை அன்று நடை பெற்ற அரசியல் அறிவியல் தேர்விற்குத் தனது 10 நாள் குழந்தையுடன் வந்தி ருந்தார். இதைக் கண்ட தேர்வு மைய அதிகாரிகள், அந்தப் பெண்ணுக்காகத் தேர்வு மையத்திலேயே சிறப்புத் தாய்-சேய் வசதிகளைச் செய்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram