முந்தய பக்கம்

பெண் உயிரிழப்பில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

3 Jul 2026, 12:44 am
பெண் உயிரிழப்பில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்
<p><strong>பெண் உயிரிழப்பில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்</strong></p><p>தருமபுரி, ஜூலை 2- மொரப்பூர் அருகே பெண் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகக்கூறி, அவரது உறவி னர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தம்பி செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாந்த குமார் (44). இவரது மனைவி அம்பிகா (35). இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். இந்நி லையில், சாந்தகுமாரின் உறவினர்கள் கயல் விழி, தமிழ்ச்செல்வன் ஆகியோரால், தம்பதி யிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அம்பிகா விஷம் குடித்து உயிரிழந்துவிட்டதாக, அவ ரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. நேரில் வந்த பார்த்த அம்பிகாவின் உற வினர்கள், அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றஞ்சாட்டி, அரூர் - தருமபுரி நெடுஞ்சாலையில் அமர்ந்து புதனன்று மறிய லில் ஈடுபட்டனர். அப்போது, சாந்தகுமார் மற்றும் அவரது உறவினர்கள் கயல்விழி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி னர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த அரூர் துணை காவல் கண்காணிப் பாளர் சதீஷ்குமார், மறியலில் ஈடுபட்டோரி டம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் அளித்த வாக்குறுதியின் பேரில், சாலை மறி யல் கைவிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram