கோவை ஈஷா மையத்தில் பெண் தற்கொலை!
25 Jun 2026, 3:51 pm

கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மலர்விழி (45) என்ற பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மலர்விழி (45). இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மலர்விழி, கடந்த ஜூன் 19-ஆம் தேதி நெல்லையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, தான் பணியை ராஜினாமா செய்துவிட்டு நிரந்தரமாக ஊருக்கே திரும்பப் போவதாகக் கூறிவிட்டு, கடந்த ஜூன் 21 அன்று ரயிலில் கோவைக்கு புறப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து, ஜூன் 22 அன்று ஈஷா யோகா மையத்திற்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள பெண்கள் கழிவறைக்குச் சென்ற மலர்விழி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இரவு 9:30 மணியளவில் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் மயங்கிக் கிடப்பது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலாந்துறை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், மலர்விழியைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, மலர்விழியின் உடல் உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (CMCH) அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் பி.என்.எஸ் பிரிவு 194-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.