திருச்சி விரைவு செய்திகள்
8 Jan 2026, 2:44 pm

வேன் மோதி பெண் படுகாயம்

நத்தம், ஜன.8- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த வர் வீரமணி(50). இவர் நத்தம் அருகே குட்டூரில் உள்ள சிவன் கோவிலில் சமையல் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி வந்த வேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைக்கும் இடம் மாற்றம்

சின்னமனூர், ஜன.8- குச்சனூர் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் ஏற் பட்ட சர்ச்சைக்குப் பின், திட்ட இடம் மாற்றப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கிவிட்டன. சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் இராஜ பாளையம், துரைச்சாமிபுரம் பகுதிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் அமைந்துள்ளது. இத னால், துரைச்சாமிபுரம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கக் கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, திட்டத்தை 3 கி.மீ. தூரத்தில் உள்ள சங்கராபுரம் சாலைக்கு மாற்றப்பட்டது. இதற்காக அரசு புறம்போக்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு, 60 சென்ட்கள் பரப்பளவில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி யுள்ளன. பூமி பூஜை நிகழ்ச்சி குச்சனூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சின்னபாண்டியன், மன்ற உறுப்பினர்கள் தயாளன், முத்துராமலிங்கம், சந்தானம், மீனாட்சி, பிரேமா, நாகராணி, லீலாவதி மற்றும் பிற அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

கஞ்சா கடத்தல்; 2 பேர் கைது

கடமலைக்குண்டு, ஜன.8- தேனியில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவ தாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடமலைக்குண்டு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையில் வாகன தணிக்கை நடத்தினர். டாணா தோட்டம் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தில் இருந்து இறங்கி சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பைகளை சோதித்தபோது 12 பண்டல்களில் மொத்தம் 12.640 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரூ.16,800 ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், விருவீடையைச் சேர்ந்த பாண்டி (42), கம்பம் உத்தமபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ரமேஷ் மீது 8க்கும் மேற் பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்தது. இருவரையும் ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.