ஆதார் குளறுபடியால் 3 ஆண்டுகளாக முடங்கிய அரசு நலத்திட்ட உதவிகள் நடவடிக்கை கோரி பெண் மனு!
8 Jun 2026, 11:11 pm
<p><strong>ஆதார் குளறுபடியால் 3 ஆண்டுகளாக முடங்கிய அரசு நலத்திட்ட உதவிகள் நடவடிக்கை கோரி பெண் மனு!</strong> </p><p>ராணிப்பேட்டை, ஜூன் 8- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம், காரை கிராமத்தைச் சேர்ந்த கவிதா (50) என்பவருக்கு, ஆதார் அட்டையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குளறுபடி காரணமாகக் கடந்த 3 ஆண்டுகளாக ரேஷன் பொருட்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மறுக்கப்பட்டு வரு கின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடையில் கவிதா கைரேகை வைத்தபோது அது பொருந்தவில்லை. இது குறித்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் சரிபார்த்தபோது, கவிதாவின் ஆதார் எண் பதிவில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் விவரங்கள் தவறாக இணைந்துள்ளது தெரியவந்தது. இந்த குளறுபடியால் கவிதாவுக்கு ரேஷன் பொருட்கள், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட எந்தவொரு அரசு மானியமும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த 3 வருடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வட்ட வழங்கல் அலுவலகத்தி லும் பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் அலட்சி யத்தால் இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு கவிதாவின் ஆதார் குளறுபடியை நீக்கி, குடும்ப அட்டையில் அவரது பெயரைச் சேர்த்து தடையின்றி பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
