வெடி விபத்தில் சிக்கிய பெண் சென்னையில் உயிரிழப்பு: எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி அஞ்சலி
15 Jul 2026, 1:28 am
<p><strong>வெடி விபத்தில் சிக்கிய பெண் சென்னையில் உயிரிழப்பு: எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி அஞ்சலி</strong> </p><p>சிதம்பரம், ஜூலை 14 – சிதம்பரம் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் காய மடைந்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த உமா (45) என்பவர், மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் (கே.எம்.சி.) அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அவர் உயிரி ழந்தார். இத்தகவலை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்த உமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி னார். பின்னர், துயரத்தில் ஆழ்ந்திருந்த அவரது குடும்பத்தி னருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து, மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் வாணி, முதல்வர் கவிதா மற்றும் சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், உமாவின் உடலை அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான குச்சிப்பாளையத்திற்கு விரைவாகக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளையும் எம்.எல்.ஏ. மு.தமிமுன் அன்சாரி செய்து கொடுத்தார்.</p>
