அரசு மருத்துவமனை மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்
13 Jan 2026, 3:17 pm
<p><strong>அரசு மருத்துவமனை மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெண் காயம்</strong></p>
<p>தஞ்சாவூர், ஜன.13– தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். கூலி தொழிலாளியான இவரது மனைவி சரண்யா(25). இவர்களின் ஒன்றரை வயது குழந்தை யாசின், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு, சாட்டை வெடியை தின்றதால், ராஜா மிராசுதார் மருத்துவமனை, குழந்தை சிகிச்சை வார்டில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு செல்வதற்காக, டிஸ்சார்ஜ் அறிக்கை வரும் வரை வார்டில், தனது குழந்தையுடன் படுக்கை ஒன்றில் அமர்ந்து இருந்தார். அப்போது, மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து, சரண்யாவின் தலையில் விழுந்தது. இதில், சரண்யா படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் விசாரித்து வருகின்றனர்.</p>
