தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை! ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

20 May 2026, 11:11 pm
மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை! ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கு கும்பல் பாலியல் வன்கொடுமை! ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மே 20 - புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே மாற்றுத் திறனாளிப் பெண்ணை, கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 20 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை! புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மலையூர் அருகே உள்ள சாந்தம்பட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர், 37 வயதான வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி பெண்.

இவர், கடந்த 17.5.2026 அன்று அரிசி ஆலை யில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது, கடத்திச் செல்லப் பட்டு கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூரமான கும்பல் பாலியல் வன்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்! பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணை அருகில் இருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், தற்போது புதுக்கோட்டை ராணியார் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்ற வாளிகள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளதாக அறிவித்திருந் தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டத்திற்கு முன் அவர்களை நிறுத்தி வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ரூ. 20 லட்சம், அரசு வேலை வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும், கும்பல் பாலியல் வன்கொ டுமைக்கு ஆளான மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பதோடு, ரூபாய் 20 லட்சம் இழப்பீடும், தகுதியின் அடிப்படை யில் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

சிபிஎம் தலைவர்கள் நேரில் ஆறுதல்! மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி பெண்ணை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் மற்றும் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.