தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

30 Dec 2025, 5:57 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ஈரோடு, டிச.30- மொடக்குறிச்சி அருகே ஏற்பட்ட சாலை விபத் தில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரின் மனைவி மஞ்சுளா (42). இவர் தனது மகள் தனுஸ்ரீ மற்றும் அவரது சகோதரர் மகன்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிறன்று இரவு மொடக்குறிச்சியை அடுத்த குப்பையன்ன சாமி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நஞ்சை ஊத்துக் குளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஈரோட்டிலிருந்து வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த மஞ்சுளாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித் தனர். மேலும், தனுஸ்ரீ மற்றும் குழந்தைகள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

கோவை, டிச.30- கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் 23 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீஸார் அலுவலகம் வளாகம் முழுவதும் சோதனையிட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகி றார். தொடர்ந்து 22 முறை மிரட்டல் இ-மெயில் வந்த நிலையில், செவ்வாயன்று 23 ஆவது முறையாக ஆட்சி யர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் இ-மெயில் வந்தது. இதையடுத்து கோவை மாநகர வெடி குண்டு  செயலிழப்பு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல்  டிடெக்டர் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள வளாகம், வாகனம் நிறுத்துமிடம், அலுவ லக அறைகளில் சோதனையிட்டனர். அப்போது வெடி குண்டு மிரட்டல் வெரும் புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் முரளியை கிளப்பி வரும் நபர் யார் என கண்டறியும் முயற்சியில் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பார்வையாளர் அறிவுரை

உதகை, டிச.30- வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும் என தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தி யுள்ளார். நீலகிரி மாவட்டம் வாக்காளர் பட்டியல் தீவிர  திருத்தப் பணிகளுக்குப் பின், கடந்த 19ம் வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்கா ளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்க ளது பெயர்களை சேர்ப்பதற்கு ஏதுவாக முதற்கட்ட மாக டிச., 27ம் தேதி மற்றும் 28ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பு  முகாம் நடத்தப்பட்டது.  மாவட்டத் தில், 736 ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. இதில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட  பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குன்னூர் தொகுதிக் கும் முற்பட்ட ஒர சோலை ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி மற்றும் நல்லாயன் நடுநிலைப் பள்ளி யில் நடந்த சிறப்பு முகாமினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் இயக்குனரும், வாக் காளர் பட்டியல் பார்வையாளருமான ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள படி, வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் இணையதளத்தின் வாயிலாக தங்களது பெயர் இருப்பதை மொபைல் வாயிலாக தெரிந்து கொள் ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறப்பு முகாம்கள் நடைபெறுவது குறித்து வாக்கா ளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கும்போது, பி.எல்.ஓ., ஏ.பி.பி.,யில் பதிவு செய்வது மட்டுமல்லாமல் வாக்காளர் பட்டிய லில் பெயர் இல்லாத பொதுமக்கள் தேர்தல் ஆணை யம் தெரிவித்துள்ள ஆவணங்களுடன் எளிதில் அணு கும் வகையில் பொதுவான இடத்திலும் தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ராகுல்நாத் தெரிவித்தார். இந்த ஆய் வின் போது, ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உடனிருந்தார்.

சாலைகளில் அபாயகரமான பள்ளங்கள்: விபத்தில் சிக்கி முதியவர் படுகாயம்

கோவை, டிச.30– கோவை மாநகரில் குடிநீர் குழாய் கசிவு கார ணமாக ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் ஒரு வர் படுகாயமடைந்த சம்பவம் வாகன ஓட்டிகளி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை, காந்திபுரத்தில் இருந்து பாப்பநாயக்கன் பாளையம் செல்லும் சாலையில், குடிநீர் குழாய்  கசிவு காரணமாகச் சிறிய பள்ளம் ஒன்று உருவாகி யுள்ளது. அந்தப் பள்ளத்தில் குடிநீர் நிரம்பி இருந்த தால், குழி இருப்பது தெரியாமல் செவ்வாயன்று காலை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற  முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக அதற்குள்  சிக்கினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவ ருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுயநினைவின்றி இருந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடைத் திட்டப்  பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பணிகள் முடிவடைந்த இடங்களில் சாலைகள் முறையாகச் சீர மைக்கப்படாததால், கனரக வாகனங்கள் செல்லும் போது திடீரென பள்ளங்கள் உருவாகி விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க குடிநீர் குழாய் உடைப்பு அல்லது சிறு பள்ளங்கள் ஏற்படும் போதே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி யாக தலையிட்டு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழிகாட்டு நெறிமுறை

கோவை, டிச.30- கோவை மாநகரில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 1600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.  டிசம்பர் 31 (இன்று) புத்தாண்டு கொண்டாட்டத்தை முன் னிட்டு பல்வேறு  வழிகாட்டு நெறிமுறைகளை கோவை மாந கர போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாநகர் பகுதியில் மட்டும் 35 இடங்களில் சட்டம்  ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக் கையில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு தினத்தன்று கோவை  ஜி.டி நாயுடு மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், உக்கடம் மேம்பாலம் ஆகியவை இரவு 9 மணி முதல் மூடப் படும். வெளியூரிலிருந்து கோவை மாநகருக்கு வரும் எல்லைகளில் 11 இடங்களில் வாகன சோதனை மற்றும் கண் காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது மக்கள் கூட்டம் அதிகளவு வரும் என்பதால் பிட்பாக் கெட், செயின் பறிப்பு குற்றவாளிகள் போலீசாரின் கண்கா ணிப்பில் இருப்பார்கள். கொடிசியா சந்திப்பு, உக்கடம், ஆத்துப்பாலம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட  இடங்களில் அதிவிரைவு படை போலீ சார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். மேலும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 4 மாநகர காவல் துணை ஆணையர்கள், இரண்டு கூடுதல் துணை ஆணையர்கள், இரண்டு அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படை என சுமார் 1600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாண்டு கொண் டாட்டத்தில் ஈடுபட வேண்டும், மோட்டார் வாகன சட்டங் களை பின்பற்ற வேண்டும், அதே போல தனியார் கேளிக்கை விடுதிகளும் போலீசாரின் கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதகை போக்குவரத்து கழக அலுவலகம் முற்றுகை

உதகை, டிச.30- முறையாக அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி உதகை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பெம்பட்டி கிராமத்துக்கு இத்த லார் பகுதியிலிருந்து அடர்ந்த வனப் பகுதி வழியாக நான்கு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிராம மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இக்கிரா மத்திற்கு தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிராமத்திலிருந்து கடந்த ஒரு வாரத் துக்கும் மேலாக கோவைக்கு காலை  10.30 மணிக்குப் புறப்பட வேண்டிய  அரசுப் பேருந்து சரிவர இயக்கப்படுவ தில்லை. அதேபோல பிற்பகல் 2.30 மணிக்கும், மாலை 4.15 மணிக்கும் உதகையில் இருந்து தங்களது கிரா மத்துக்கு குறித்த நேரத்தில் பேருந்து கள் புறப்படுவதில்லை எனக்கூறி போக் குவரத்து கழக அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனால், போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.  இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் உதகை மத்திய பேருந்து நிலை யத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகத்தை திங்களன்று முற்றுகையிட்டனர். இதை யடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், உடனடியாக தங்களது கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக் கப்படும் என உறுதியளித்தனர். இல்லை யென்றால், பல்வேறு கட்ட போராட் டங்களில் ஈடுபடுவோம் என கிராம மக் கள் தெரிவித்தனர்.

கிடப்பில் போடப்பட்ட மேற்கூரை அமைக்கும் பணி

தருமபுரி, டிச.30- காரிமங்கலம் பேருந்து நிலையத் தில் மேற்கூரை அமைக்கும் பணி கிடப் பில் போடப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியிலுள்ள பேருந்து நிலைய பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பேருந்து நிறுத்தும் இடம் மற்றும் பொதுமக்கள், பயணிகள் நிற்கும் பகுதியில் மேற்கூரை அமைக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரூ.1.14 கோடி மதிப்பில் பேருந்து நிலையத்தில் இருபுறமும் மேற்கூரையை நீடித்து  அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப் பட்டது. இதற்காக கான்கிரீட் அடித்த ளம் போடுவதற்கு குழிகள் தோண்டப் பட்டு பீடம் அமைக்கப்பட்டது. கான்கி ரீட் அடித்தளம் அமைப்பதற்காக தோண் டப்பட்ட குழியில் இருந்து எடுக்கப் பட்ட மண் பேருந்து நிலையம் முழுவ தும் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. கான் கிரீட் பீடம் மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பணிகள் எது வும் நடக்கவில்லை. இதன் காரண மாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு  பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவ திக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பேருந்து நிலையம் பகுதியில் தனியார் வாகனங்கள், ஆட்டோ உட்பட பல் வேறு வாகனங்கள் இடையூறாக நிறுத் தப்படுகின்றன. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மேற்கூரை நீடிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழிகாட்டு நெறிமுறை

கோவை, டிச.30- கோவை மாநகரில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 1600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.  டிசம்பர் 31 (இன்று) புத்தாண்டு கொண்டாட்டத்தை முன் னிட்டு பல்வேறு  வழிகாட்டு நெறிமுறைகளை கோவை மாந கர போலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாநகர் பகுதியில் மட்டும் 35 இடங்களில் சட்டம்  ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக் கையில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு தினத்தன்று கோவை  ஜி.டி நாயுடு மேம்பாலம், திருச்சி சாலை மேம்பாலம், உக்கடம் மேம்பாலம் ஆகியவை இரவு 9 மணி முதல் மூடப் படும். வெளியூரிலிருந்து கோவை மாநகருக்கு வரும் எல்லைகளில் 11 இடங்களில் வாகன சோதனை மற்றும் கண் காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது மக்கள் கூட்டம் அதிகளவு வரும் என்பதால் பிட்பாக் கெட், செயின் பறிப்பு குற்றவாளிகள் போலீசாரின் கண்கா ணிப்பில் இருப்பார்கள். கொடிசியா சந்திப்பு, உக்கடம், ஆத்துப்பாலம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட  இடங்களில் அதிவிரைவு படை போலீ சார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். மேலும் புத்தாண்டு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 4 மாநகர காவல் துணை ஆணையர்கள், இரண்டு கூடுதல் துணை ஆணையர்கள், இரண்டு அணி தமிழ்நாடு சிறப்பு காவல் படை என சுமார் 1600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக புத்தாண்டு கொண் டாட்டத்தில் ஈடுபட வேண்டும், மோட்டார் வாகன சட்டங் களை பின்பற்ற வேண்டும், அதே போல தனியார் கேளிக்கை விடுதிகளும் போலீசாரின் கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.