முந்தய பக்கம்

பேருந்து கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

15 Feb 2026, 3:03 pm
பேருந்து கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு
<p><strong>பேருந்து கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு</strong></p> <p>கடலூர், பிப். 15- &nbsp;வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை யில் தனியார் சொகுசு பேருந்து விபத்துக் குள்ளானதில் பெண் ஒருவர் உயிரி ழந்தார். 25-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் சிவன் மடம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை, பிப். 15) அதிகாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற அந்தப் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரேணுகா விஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோர் உடனடியாக மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேப்பூர் முதல் தொழுதூர் வரை அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், மாவட்ட நிர்வாக மும் நெடுஞ்சாலைத் துறையும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram