தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவறான சிகிச்சை என உறவினர்கள் புகார் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு

21 Nov 2025, 5:11 pm
தவறான சிகிச்சை என உறவினர்கள் புகார் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு
<p><strong>தவறான சிகிச்சை என உறவினர்கள் புகார் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு</strong></p> <p>கோபி, நவ.21- பிரசவத்திற்காக வந்த பெண் உயிரிழந்த நிலையில், தவறான சிகிச்சையே காரணம் என உறவி னர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் அருகே உள்ள புதுகொத்துக் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச் சாமி. இவரது மனைவி இலட்சுமி, &nbsp;இருவருக்கு ஏற்கனவே நான்கு வயதில் மகன் உள்ளார். இந்நி லையில் இலட்சுமி மீண்டும் கர்ப்ப மான நிலையில், அரசு மருத்துவம னையில் மாதந்திர பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார். இத னையடுத்து, &nbsp;கடந்த அக்.24 ஆம் &nbsp;தேதியன்று இலட்சுமி பிரசவத்திற் காக கோபி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவ ருக்கு அக்.29 ஆம் தேதியன்று சுகப் பிரசவமாக ஆண் குழந்தை பிறந் தது. இதனிடையே, இலட்சுமிக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் கருத்தடை அறுவை சிகிச்சை செய் யாமல், காப்பர் டி பொருத்தியுள் ளனர். குழந்தை பிறந்து தாயும் குழந்தையும் நலமாக இருந்துள் ளனர். இந்நிலையில், அண்மையில், அரசு மருத்துவமனைக்கு சென்று கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனை யடுத்து, இலட்சுமிக்கு வயிற்று வலி &nbsp;ஏற்பட்டு கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. காப்பர் டியை அகற்றும்போது கர்ப்பபைக்கும் குடல் பகுதிக்கும் பாதிப்பு ஏற்பட்ட தில் கர்ப்பபையை அகற்றியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக உடல் நிலை மோசமான நிலை யில், மேல்சிகிச்சைக்காக இலட்சுமி மற்றும் குழந்தையை கோவை &nbsp;அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 10 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இலட்சுமி வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையின் தவ றான சிகிச்சையின் காரணமாகவே உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, இலட் சுமியின் குடும்பத்தினர் மற்றும் &nbsp;உறவினர்கள் கோபிசெட்டிபாளை யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.