நிலத் தகராறில் பொய் வழக்கு எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தர்ணா
7 May 2026, 11:49 pm
<p><strong>நிலத் தகராறில் பொய் வழக்கு எஸ்.பி. அலுவலகத்தில் பெண் தர்ணா</strong></p><p>கோவை, மே 7- நிலத் தகராறு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், மாறாக தங்கள் மீதே பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வியாழனன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத் தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு, கோவை கணியூர் கிராமத்தில் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக ராஜேந்திரன் என்பவருடன் நீண்ட நாள் தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி, ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவா ளர்கள் ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தி, சிசிடிவி கேமரா, டிவிஆர், சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை சேதப் படுத்தி எடுத்துச் சென்றதாக சித்ரா தரப்பில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், தாங்கள் அளித்த புகாரின் மீது நடவ டிக்கை எடுக்காமல், எதிர்தரப்பின் புகாரின் அடிப்படையில் தங்கள் மீதே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சித்ரா குற்றம்சாட்டினார். மேலும், கடந்த 30 ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் மற்றொரு தகராறு சம்பவத்திலும் தங்களை தொடர்புபடுத்தி பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். அன்று குடும்பத்தில் துக்க நிகழ்ச்சி நடைபெற்றதால் வீட்டி லேயே இருந்ததாக கூறிய அவர்கள், இது திட்டமிட்ட நடவ டிக்கை என குற்றம்சாட்டினர். தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, எஸ்.பி. அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் தர்ணா போராட் டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
