மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல் பெண் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
4 Jul 2026, 12:47 am

மதுபானக் கடையை அகற்றக்கோரி மறியல் பெண் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு

சேலம், ஜூலை 3- சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றி யத்திற்குட்பட்ட இருப்பாளியில் உள்ள அரசு மதுபானக் கடையை (கடை எண்: 7277) அகற்றக்கோரி பொதுமக் கள் நடத்திய சாலை மறியல் போராட் டத்தில், பெண் ஒருவர் மண்ணெண் ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இப்பகுதியில் உள்ள மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி, கடந்த மாதம் 1 ஆம் தேதி பொதுமக்கள் கடை யின் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

அப் போது, கடையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் ஒரு மாத காலம் அவ காசம் கேட்டதால் போராட்டம் கைவிடப் பட்டது. ஆனால், கெடு முடிந்தும் கடை அகற்றப்படாததால் ஆவேசமடைந்த மாணவர்கள் மற்றும் 500க்கும் மேற் பட்ட பொதுமக்கள், எடப்பாடி - ஜல கண்டாபுரம் பிரதான சாலையில் வெள்ளியன்று மீண்டும் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூலாம்பட்டி போலீசார் பொதுமக்களி டம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர்.

எனினும், உடன்பாடு எட்டப் படாததால் தொடர்ந்து போராட்டம் நீடித் தது. அப்போது, மறியலில் ஈடுபட்டி ருந்த கூட்டத்திலிருந்து பெண் ஒருவர் திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

அங்கிருந்த பாதுகாப்புப் போலீசார் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசா ருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதி யில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.