தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருநர் உரிமை பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

23 Mar 2026, 5:33 pm
திருநர் உரிமை பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
<p><strong>திருநர் உரிமை பாதுகாப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெறுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சென்னை, மார்ச் 23 - திருநர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா-2026ஐ திரும்ப பெற வலியுறுத்தி திங்களன்று (மார்ச் 23) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள திருநர் சட்டத் திருத்த மசோதாவுக்கு சிபிஎம் மத்திய குழு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.&zwnj; ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள திருநர் திருத்த மசோதா பிற்போக்குத்தனமானது. அரசி யல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. குறிப்பாக, உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு எதிராக இந்த திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவரது பாலினத்தை உறுதி செய்வதற்கான அடையாளத்தை மருத்துவக் குழுவிடம், மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழ் பெற வேண்டுமென திருத்த சட்டம் சொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. மேலும் புதிய சட்டத்தில் திருநர்களை புறக்கணித்துள்ளனர். திருநர், திருநங்கை என அழைக்கப்படும் சூழலில் அரவாணி என்ற வார்த்தையை இந்த திருத்தச் சட்டத்தில் பயன்படுத்தி உள்ளனர். இது பிற்போக்குத்தனமானது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திருநங்கைகள் நல வாரியம் மூலம் பல்வேறு முற்போக்கு நலத்திட்டங்கள் முன்னெடுப்பதை இந்த புதிய சட்டம் சீரழிக்கிறது. எனவே, பாஜக அரசு முன்வந்துள்ள திருநர் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடாளு மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சிபிஎம் &nbsp;தொடர்ந்து போராடும் என்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார், மூத்தத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் மயிலை பாலு, மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு அன்பரசன், மாநிலக்குழு உறுப்பினர் லக்ஷயா மன்னார், சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு உறுப்பினர் பா.ஹேமாவதி, சமூக செயற்பாட்டாளர்கள் சுதா, ஜெயா, சபிதா, ஷாஷா, ஸ்ரீஜித்சுந்தர், உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.