விதைகள், மின்சார மசோதாவை திரும்பப் பெறுக! ஐக்கிய விவசாயிகள் முன்னணி வலியுறுத்தல்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>விதைகள், மின்சார மசோதாவை திரும்பப் பெறுக! ஐக்கிய விவசாயிகள் முன்னணி வலியுறுத்தல்</strong></p>
<p>கரூர், டிச.10 - ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித் துள்ள, விதைகள் மீதான விவசாயிகளின் உரி மையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் விதைகள் மசோதா-2025, விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார மசோதா-2025 ஆகிய வற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, ஐக்கிய விவ சாயிகள் முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அவற்றின் நகல்களை தீயிட்டு எரிக்கும் போராட்டம் செவ்வாயன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. கரூர் மாவட்டம் மாயனூர் பேருந்து நிறுத்தத் தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், மாவட்டத் தலைவர் கே.கந்தசாமி, விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, ஐக்கிய விவசாய முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விவசாயிகள் சங்க கிருஷ்ணராயபுரம் ஒன்றியச் செயலாளர் ஏ.நாகராஜன், வக்கீல் சரவணன், பழைய ஜெயங்கொண்டம் வி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் திருவையாறு ஒன்றியம், வரகூர், அம்மைய கரம், மணத்திடல், கண்டியூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவையாறு ஒன்றியச் செயலாளர் கே.மதியழகன் தலைமை யில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, அடி மனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ராம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரக் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றியத் தலை வர் எஸ்.வி.கருப்பையா, ஒன்றியப் பொறுப்பாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலை மையில், மூத்த தோழர் வீ.கருப்பையா முன்னிலை யில் விவசாயிகள் கலந்து கொண்டனர். பேராவூரணி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற சட்ட மசோதா நகல் எரிப்பு போராட் டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளருமான என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மனோகரன், எம்.செல்வம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வே.ரெங்கசாமி, வி.ஆர்.கே. செந்தில்குமார், வீ.கருப்பையா, தென்னை விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றி யம், ஆலங்குடி கடைவீதியில் நடைபெற்ற போராட் டத்தில் சிபிஎம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கே.சுப்பிரமணியன், தலை வர் எஸ்.இளங்கோவன், சிபிஐ தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.சின்னராசா, தலைவர் கலியபெருமாள் மற்றும் ஐக்கிய விவசா யிகள் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ம.மகேந்திரன் தலைமையில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணிவேல், சிபிஎம் ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம், செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன், தா.பழூர் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.உத்திராபதி, தீண்டாமை ஒழிப்பு மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்டச் செயலாளர் அருணாசலம், விவசாயிகள் சங்க ஒன்றிய பொரு ளாளர் பி.ஆர்.தனவேல், சிஐடியு மாவட்ட பொரு ளாளர் ரவீந்தரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ஏ.சுந்தர மூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.குமார் கூறினார்.</p>
