அணுமின் உற்பத்தி மசோதாவை திரும்ப பெறுக
29 Dec 2025, 6:22 pm
<p><strong>அணுமின் உற்பத்தி மசோதாவை திரும்ப பெறுக</strong></p>
<p>கோவை, டிச.29- அணுமின் உற்பத்தி மசோ தாவை திரும்பப் பெறக்கோரி மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்தியாவின் இறையாண் மையை காவு கொடுத்து அதானி மற்றும் அம்பானி வகையறாக்க ளுக்காக மக்களின் உரிமைகளுக் கும் உடைமைகளுக்கும் பாதுகாப் பற்ற அணுமின் உற்பத்தி மசோதா Shanti Bill -2025 ஐ திரும்பப் பெற வேண்டும். தேசத்தில் உள்ள அனைத்து மின் விநியோக பிரிவு களை முற்றிலும் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு ஒப்படைக்கும் மின்சார சட்ட திருத் தம் -2025 ஐ திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தும், ஒன்றிய மோடி அரசே கண்டித்து மின் வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திங்களன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அதன்ஒருபகுதியாக கோவை டாடாபாத் தலைமை பொறியாளர் அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாநில இணைச் செய லாளர் கந்தவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மண்டல செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் டி.மணிகண்டன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, ஏஐடியுசி மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, யுடி யுசி மாவட்டச் செயலாளர் காதர் இப்ராஹிம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் தொழிலாளர் பொறியாளர், அலு வலக பணியாளர்கள், விவசாயி கள் என திரளானோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலை வர் பி. ஜீவா தலைமை வகித்தார். எம்ளாயீஸ் பெடரேஷன் திட்ட தலைவர் அருள்நாதன், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் தீ. லெனின் மகேந்திரன், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சி. முருகன், மாவட்டச் செயலாளர் சிவராமன், ஐக்கிய தொழிலாளர் பொறியாளர் சங்கத் தின் துணை பொதுச்செயலாளர் ஏ. ஆறுமுகம், பொறியாளர் சங்கத் தின் திட்ட பொருளாளர் அருணகிரி, பொறியாளர் கழகத்தின் தலைவர் சொந்தில் முருகன், என்எல்ஒ திட்ட தலைவர் பிரபாகரன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
