நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக!
8 Dec 2025, 4:39 pm
<p><strong>நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறுக!</strong></p>
<p>தொழிலாளர் சட்டங்களை 4தொகுப்பு களாக மாற்றி, தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து திங்களன்று (டிச 8), தமிழகம் முழுவதும் இடது சாரிக்கட்சிகள் மற்றும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட தமிழகத்தில் உள்ள மாவட்டங்களி லும் இந்த ஆர்ப்பாட்டம் எழுச்சியாக நடை பெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் இக்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். திருவள்ளூர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் இடதுசாரிகள் மற்றும் விசிக இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இதற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சிபிஐ (எம்.எல்) மாநில செயலாளர் எம்.அன்பு, விசிக மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், மைய மாவட்ட செயலாளர் வே.அருள்கௌதம், கிழக்கு மாவட்ட செயலாளர் சி.நீலமேகம், ஆவடி பெருமா நகர் செயலாளர் மு.ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் அ.சவுந்தரராசன், விசிக முதன்மை செயலாளர் பனையூர் மு.பாபு எம்எல்ஏ, சிபிஐ மாநில குழு உறுப்பினர் ஜி.மஞ்சுளா ஆகியோர் பேசினர். காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயற்குழு குழு உறுப்பினர் சாமிநாதன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.நேரு வரவேற்புரை ஆற்றினார் இறுதியாக ஆர்ப்பாட்டத்தை விசிக மாநில துணைப் பொது செயலாளர் வன்னியரசு நிறைவுரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். செங்கல்பட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலை யத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பிஎஸ்.பாரதி அண்ணா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், விசிக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சாந்தி, சிபிஐஎம்எல் மாநிலச் பொது செயலாளர் இரணியப்பன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ராணிப்பேட்டை ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ். சங்கர் மேஸ்திரி, விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபா.இளைய நிலா, விசிக மத்திய மாவட்ட செயலாளர் சீம. ரமேஷ் கர்ணா, விசிக மேற்கு மாவட்ட செயலாளர் ப. பிரபாகரன், சிபிஐ(எம்.எல்) சீ.ஆ. சிம்புதேவன் கூட்டு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி, விசிக சிபிசுந்தர் உரையாற்றினர். வேலூர் வேலூர் அணாணா கலையரங்கம் அருகில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.டி.சங்கரி-சிபிஐ(எம்), ஜி.லதா-சிபிஐ, ஏழுமலை-சிபிஐ (எம்எல்) மற்றும் வேலூர் பிலிப், கோட்டி(எ) கோவேந்தன் - விசிக கட்சிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் - ஐ.ஆறுமுகநயினார்,சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் - வகிதா நிஜாம் ,சிபிஐ (எம்எல்) மாவட்ட செயலாளர் - எம்.சரோஜா மற்றும் விசிக மாநில அமைப்பு செயலாளர் - நீல.சந்திரகுமார் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளர் நந்தி, விசிக தெற்கு மாவட்டச் செயலாளர் வெற்றிகொண்டான், விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் ஓம்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் மாநில உறுப்பினர் குமார், விசிக மாநில துணைப்பொதுச்செயலாளர் ரஜினி காந்த், சிபிஐ மாநில நி.குழு உறுப்பினர் தேவராஜி, விசிக மண்டல செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ், சிபிஎம்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காத்தவ ராயன், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே சிபிஎம் மாவட்ட செயலாளர் ப. செல்வன், சிபிஐ மாவட்ட செயலாளர் இரா. திருமலை, விசிக மாவட்ட செயலாளர் ச.நியூட்டன், சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் எம். ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே. சி.கோபிகுமார், எம். சிவக்குமார், சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம்.இலகுமையா, மாவட்ட பொருளாளர் வே.முத்தையன், விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எழில் கரோலின், மண்டல செயலாளர் பு. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். விழுப்புரம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திட லில் மாவட்ட செயலாளர்கள் என்.சுப்பிர மணியன்(சிபிஎம்), ஆ.சௌரிராஜன்(சிபிஐ), ரா.பெரியார்(விசிக), டி. பிராங்க்ளின் (சிபிஐ-எம்.எல்) ஆகியோர் தலைமை யில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், விசிக மாநில பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் (எம்எல்ஏ)ஆகியோர் உரை யாற்றினர். கடலூர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் உரையாற்றினார். சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர் மு.கண்ணகி, விசிக மாநில அமைப்புச் செயலாளர் திருமார்பன்,சிபிஐஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் ராஜசங்கர்,சிபிஐ மாவட்ட செயலாளர் பி.துரை உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாநகர் செயலாளர் ஆர்.அமர்நாத் நன்றி கூறினார். கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை எதிரில் சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம். ஜெய்சங்கர்,சிபிஐ மாவட்ட செயலாளர் கே.ராமசாமி, விசிக தெற்கு மாவட்ட செயலாளர்இரா.மதியழகன்,கிழக்கு மாவட்ட செயலாளர் கூ.அறிவுக்கரசு,வடக்கு மாவட்ட செயலாளர் வேல்.பழனியம்மாள்,சிபிஐ எம்.எல் லிபரேஷன் மாவட்ட செயலாளர் டி.கலிய மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எஸ். வாலண்டினா,சிபிஐ மாநில நிர்வாக குழு த.லெனின்,விசிக்க அமைப்புச் செயலாளர் கவிஞர் இளமாறன்,சிபிஐ எம் எல் மத்திய கமிட்டி பாலசுந்தரம் ஆகியோர் பேசினர். கிருஷ்ணகிரி இடதுசாரி கட்சிகள், விசிக சார்பில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.சுரேஷ், சிபிஐ (எம்.எல்) மாவட்ட செய லாளர் ஸ்டாலின்பாபு, சிபிஐ செயற்குழு உறுப்பினர் மாதையன்,விசிக மாவட்ட செயலாளர் குபேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஐ நிர்வாக குழு உறுப்பினர் பழனி,விசிக ராமச்சந்திரன், சிபிஐ (எம்.எல்) மத்தியகுழு உறுப்பினர் சந்திர மோகன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சாமி நடராஜன்,மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஸ்ரீதர், ஆர்.சேகர்,பிரகாஷ், மகா லிங்கம், ஜி.கே.நஞ்சுண்டன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,நடராஜன், சி.பி.ஜெய ராமன் கலந்து கொண்டனர்.</p>
