தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூறுநாள் வேலை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக! திருத்துறைப்பூண்டியில் தொடர் முழக்கப் போராட்டம்

4 Feb 2026, 5:19 pm
நூறுநாள் வேலை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக! திருத்துறைப்பூண்டியில் தொடர் முழக்கப் போராட்டம்
<p><strong>நூறுநாள் வேலை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறுக! திருத்துறைப்பூண்டியில் தொடர் முழக்கப் போராட்டம்</strong></p> <p>திருத்துறைப்பூண்டி, பிப்.4 - ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்துள்ள நூறு நாள் வேலை திட்டத் தின் மீதான புதிய சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு &nbsp;ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு சார்பில் கடந்த &nbsp;மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றி யத்தில் இருக்கக் கூடிய அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பும் &nbsp;நூறு நாள் பயனாளிகளை திரட்டி இப் போராட்டம் நடைபெறுகிறது. &nbsp;செவ்வாயன்று திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியத்தின் பாமணி, கொக்கலாடி, கெருக்கை, சேகல், &nbsp;ஆதிரங்கம், விளக்குடி உள்ளிட்ட பகுதி களில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அந்தந்த பகுதியில் இருக்கக் கூடிய ஒன்றியக் குழு உறுப் பினர்கள் என்.வீராச்சாமி, முத்துச் செல்வன், மதியழகன், சுந்தரேசன் ஆகி யோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் உரையாற்றினார். திருத்துறைப் பூண்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல் மார்க்ஸ், ஒன்றியக் குழு &nbsp;உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் கள், மாதர், வாலிபர் சங்கத்தினரோடு இணைந்து நூற்றுக்கணக்கான பொது மக்களும் பங்கேற்றனர். மேலும், அனைத்து வீடுகளிலும் துண்டு பிரசுரம் &nbsp;விநியோகிக்கும் பணியும் தொடர்கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.