முந்தய பக்கம்

உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை கைவிடுக

23 Jul 2026, 11:51 pm
உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை கைவிடுக
<p><strong>உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை கைவிடுக</strong></p><p>ஈரோடு, ஜூலை 23- தேசிய உணவு பாது காப்பு சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கு 7 கிலோ அரிசி வழங்கும் புதிய உணவு பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். மாற் றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை குடும்பங்க ளுக்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி கள் அனைவருக்கும் ரேசன் பொருட்களை நாடு முழுவதும் வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி வியாழனன்று மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் ஈரோடு தாலுகா தலைவர் எம்.ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.ரேணுகா சிறப்பு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ப.மாரி முத்து கண்டன உரையாற்றினார். திரளா னோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின் நிறை வாக, கே.தங்கமணி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram