முந்தய பக்கம்

குளிர்கால புலிகள் கணக்கெடுப்புப் பணி துவக்கம்

30 Dec 2025, 5:57 pm
குளிர்கால புலிகள் கணக்கெடுப்புப் பணி துவக்கம்
<p><strong>குளிர்கால புலிகள் கணக்கெடுப்புப் பணி துவக்கம்</strong></p> <p>ஈரோடு, டிச.30- சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் 6 நாட்கள் நடைபெறும் மழைக்குப் பிந்தைய குளிர் கால புலிகள் கணக்கெடுப் புப் பணி திங்களன்று துவங் கியது. ஈரோடு மாவட்டம், சத் தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் உள்ள சத்தியமங்க லம், பவானிசாகர், விளா முண்டி, டி.என்.பாளையம், கடம்பூர், கேர்மாளம், ஆசனூர், தலமலை, தாளவாடி என 10 வனச்சரகங்களில் குளிர் கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்களன்று துவங்கியது. தொடர்ந்து 6 நாட் கள் நடைபெறும் இப்பணியில், அந்தந்த வனச்சரகங்களில் பணியாற்றும் வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் 2 வேட்டை தடுப்புக் காவலர்கள் என 4 பேர் &nbsp;கொண்ட குழு அமைக்கப்பட்டது. 10 வனச்சர கங்களில் மொத்தம் 76 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 304 பேர் கணக்கெடுப்பில் ஈடு பட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது, அதி நவீன கேமராக்கள், எம்ஸ்டிப் செயலி, ரேஞ்ச் &nbsp;பைன்டர், காம்பஸ் ஜிபிஎஸ் கருவி போன்ற &nbsp;கருவிகள் கையாளப்பட்டன. சத்தியமங்க லம் புலிகள் காப்பகத்தின் வனத்தில் புலி கள் நடமாடும் பகுதியில் சேகரிக்கப்படும் புலிகளின் கால் தடம், எச்சம், கீறல், நேரடி யாக பார்த்தல் மற்றும் கேமரா பொருத்தி அதன் வழியாக நடந்து செல்லும்போது, புலிகளை பதிவு செய்தல் மூலம் புலிகள் எண்ணிக்கை கணிக்கிடப்படும். &nbsp;புலிகள் எண்ணிக்கையின் அடிப்படை யில் அவற்றுக்குத் தேவையான பாதுகாப்பு களை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணை யம் அதிகப்படுத்துவும். புலிகள் ஆரோக்கி யமாக வாழ்வதற்கு அதன் வாழ்விடத்தை மேம்படுத்தவும், மனித- விலங்கு மோத லைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்க வும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram