தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பீகாரில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது சிபிஐ(எம்-எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பேட்டி

8 Nov 2025, 2:42 pm
பீகாரில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது சிபிஐ(எம்-எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பேட்டி
<p><strong>பீகாரில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது சிபிஐ(எம்-எல்) பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா பேட்டி</strong></p> <p>பாட்னா பீகாரில் அடித்தட்டு மக்களுக்கான அரசியல், வலுவான ஆட்சி எதிர்ப்பு உணர்வு மற்றும் &nbsp;மகா கூட்டணிக்கான (இந்தியா கூட்டணி) சாத்தியக்கூறுகள் குறித்து சிபிஐ (எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட் டாச்சார்யா &lsquo;தேசாபிமானி&rsquo; மலையாள நாளிதழ் செய்தியாளர் எம்.அகிலுக்கு அளித்த பேட்டி. தற்போதைய சூழ்நிலை? பீகார் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார்கள். 2020ஆம் ஆண்டில், ஜேடியு-பாஜக கூட்டணி குறுகிய பெரும்பான்மையுடன் தப்பித்தது. இப்போது, மக்கள் மிக வும் சோர்வடைந்துள்ளனர். இந்த அர சாங்கத்தை எந்த விலைகொடுத்தும் வீழ்த்த மக்கள் உறுதியாக உள்ளனர். அந்த உறுதிப்பாடு நிச்சயமாக இந்தத் தேர்தலில் பிரதிபலிக்கும். இலவசங்களை அறிவிப்பதன் மூலம் ஆட்சி எதிர்ப்பு உணர்வை தேசிய ஜனநாயக கூட்டணியால் வெல்ல முடியுமா? தேர்தலின் போது மழையாய்ப் பொழியும் வாக்குறுதிகளை பீகாரி மக்க ளால் புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக பீகாரில், இளைஞர்களை ஏமாற்ற முடியாது. வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களிடம் - நாட்டை &nbsp;விட்டு வெளியேற வேண்டிய கட்டா யத்தில் உள்ளவர்களிடம், சமூக ஊட கங்களில் நல்ல ரீல்களை உருவாக்கி பணம் சம்பாதிக்க மோடி கூறுகிறார். பெண்களுக்கு வேலைவாய்ப்பு உதவி குறித்த நிதிஷ் குமாரின் அறிவிப்பு வீண். உண்மையில், பெண்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய உதவி அவர்களை மேலும் கடனில் ஆழ்த்தும். மகா கூட்டணியில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா? தொகுதி ஒதுக்கீடு விவாதங்கள் அதிக நேரம் எடுத்தது உண்மைதான். ஆனால், அனைத்துப் பிரிவுகளுக்கும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வேட்பாளர் பட்டியல் மகா கூட்டணியி டம் உள்ளது. பாஜகவின் 101 வேட்பா ளர்களில் 49 பேர் உயர்சாதியைச் சேர்ந்த வர்கள். சமீபத்திய சமூக கணக்கெடுப் பின்படி, &nbsp;மக்கள் தொகையில் 15 சத விகிதம் மட்டுமே உயர்சாதி மக்கள் உள்ளனர். ஆனால் வேட்பாளர்களில் 50 சதவிகிதம் பேர் அவர்கள்தான். தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. ஒரு முஸ்லிம் கூட இல்லை. ஆனால், அனைத்துப் பிரிவுகளும் மகா கூட்டணியில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. எனது மதிப்பீடு என்ன வென்றால், இப்போது மகா கூட்டணி யில் அதிக ஒற்றுமையும் உறுதிப்பாடும் உள்ளது. முகேஷ் சாஹ்னியின் விகா ஷீல் இன்சான் கட்சி இந்த கூட்டணி யில் இடம்பெற்றிருப்பது தீர்க்கமான தாக இருக்கும். எஸ்ஐஆர் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? வாக்காளர் பட்டியலை (எஸ்ஐஆர்) தீவிரமாக மறுபரிசீலனை செய்வது நிச்ச யமாக பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது. முழு சித்திரம் இன்னும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தொகு தியிலும் குறைந்தது 10,000 வாக்குகள் குறைக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று அனைத்து &nbsp;வேட்பாளர்களிடமும் நான் கூறியுள் ளேன். எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் இடங்களில், பரவலாக வாக்குகள் குறைவது உறுதி. தேர்தல் பத்திரங்க ளைப் போலவே, பல ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்ஐஆர் அரசமைப்பிற்கு விரோத மானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளிக்கலாம். ஆனால், அதற்குள் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். தமிழில்: &nbsp;சி.முருகேசன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.