முந்தய பக்கம்

விம்கோ நகர் மெட்ரோ தூண் சுவர் இடிந்து விபத்து

7 May 2026, 2:31 am
விம்கோ நகர் மெட்ரோ தூண் சுவர் இடிந்து விபத்து
<p><strong>விம்கோ நகர் மெட்ரோ தூண் சுவர் இடிந்து விபத்து</strong></p><p>சென்னை, மே 6- திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் 248-வது தூண் பகுதியில் இருந்த மேற்கூரை தடுப்பு சுவர் செவ்வாயன்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதே வழித்தடத்தில் ஏற்கெனவே இருமுறை இது போன்ற இடிந்து விழும் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், கட்டுமானத்தின் தரம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதால், மெட்ரோ நிர்வாகம் உடனடியாக அனைத்துத் தூண்களையும் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram