வேழம் இயலியல் பூங்கா திறக்கப்படுமா?
5 Dec 2025, 4:21 pm
<p><strong>வேழம் இயலியல் பூங்கா திறக்கப்படுமா?</strong></p>
<p>கோவை, மேட்டுப்பாளையம் பகுதி, தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கியமான யானை வழித்தடமாக உள்ளது. அடர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் மேட்டுப்பாளை யம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி என எண்ணற்ற வன உயிரினங்கள் இருந்தாலும், யானைகளின் எண்ணிக் கையே அதிகம். மூன்று மாநிலங்களின் காடுகளை இணைக்கும் முக்கிய யானை வழித்தடமாக மேட்டுப் பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால் இவ்வழியே கூட்டம் கூட்டமாக யானைகள் வலசை செல்வது வழக் கம். வழித்தட பாதையில் ஏற்படும் இடையூறுகளால் திசை தப்பும் சில யானைகள் வனத்தை ஒட்டி உள்ள கிராமங்க ளுக்குள் புகுந்து விடுவதும், இதனால் யானை மனித மோதல்கள் நடப்பதும் தொடர் நிகழ்வாகி வருகிறது. யானைகளின் நடமாட்டத்தை கண்டவுடன் சிலர் அதனை கற்களாலும் தீ பந்தங்களாலும் ராக்கெட் வெடிகளாலும் தாக்குவது நேரடி மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலி கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் எதிர் கொள்வதால் யானைகள் உயிரிழக்கின்றன..அல்லது இத னால் கோபமடைந்த யானைகள் தாக்கி மனித உயிரி ழப்புகளும் ஏற்படுகின்றன.. இம்மோதல்களை தவிர்க்கவும், யானைகள் மீதான மனிதர்களின் வெறுப்புணர்வை போக்கவும், யானை களின் வாழ்வியல் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், வனத்துறை சார்பில் “வேழம் இயலியல் பூங்கா” அமைக் கும் பணி சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப் பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல் லும் வழியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான அரசு மரக்கிடங்கு வளாகத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டம் ஆரம்பத்திலிருந்தே நிதிப் பற்றாக்குறை யால் முழு வேகத்தில் நடைபெறாமல் அவ்வப்போது தடை பட்டு வந்தது. உலகில் வாழ்ந்த யானை இனங்கள், சங்க இலக்கியத்தில் யானையின் பங்கு, அதன் இயல்பு போன்றவற்றை விளக்கும் சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், அரிய புகைப்படங்கள் மற்றும் நாணயங்கள் எனக் கலை நயத்துடன் பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட காட்சி கள் பூங்காவில் வைக்கப்பட்டன. ஏறத்தாழ 80 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலை யில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பூங்கா அமைக்கும் பணிகள் மீண்டும் முடங்கிக் கிடக்கின் றன. இது, யானை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வனம் மற்றும் வனவிலங்குகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வும் புரிதலும் ஏற்பட்டிருக்க வேண்டிய இவ்வேளை யில், பணிகள் தடைபட்டிருப்பது வருத்தமளிக்கிறது. தற் போது, பிரம்மாண்ட யானை பொம்மைகள் சேதமடைந் துள்ளன. பூங்காவிற்காக வைக்கப்பட்ட புல்வெளிகள் காய்ந்து, இடம் யாருக்கும் பயனற்று புதர் மண்டி காணப் படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவ லர் சசிகுமார் கூறுகையில், “பூங்கா அமைக்கும் பணி என் பது சதவீதம் நிறைவடைந்துவிட்டது. முகப்பு ஆர்ச் மற்றும் கழிவறை கட்டுவது போன்ற ஒரு சில பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாகவே தடைபட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, இறுதி கட்டப் பணிகள் துவங்கப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். யானையைக் குறிக்கும் அழகிய செந்தமிழ் சொல்லான “வேழம்” என்ற பெயரில் அமைய இருந்த இந்தப் பூங்கா, மீண்டும் முழு வீச்சில் செயல்பட்டு, யானை-மனித மோதலுக்குத் தீர்வு காணும் விழிப்புணர்வு மையமாகத் திகழ வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். </p>
<p> </p>
