தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொங்கல் திருநாளை புறக்கணித்து யூனியன் வங்கி ஆய்வுக் கூட்டமா?

7 Jan 2026, 4:05 pm
பொங்கல் திருநாளை புறக்கணித்து யூனியன் வங்கி ஆய்வுக் கூட்டமா?
<p><strong>பொங்கல் திருநாளை புறக்கணித்து யூனியன் வங்கி ஆய்வுக் கூட்டமா?</strong></p> <p>மதுரை, ஜன. 7 &ndash; யூனியன் வங்கி (Union Bank of India) தனது &nbsp;அனைத்து மண்டல மற்றும் பிராந்திய மேலா ளர்களுக்கான வணிக ஆய்வுக் கூட்டத்தை ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் லக்னோ வில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இதற்காக &nbsp;அதிகாரிகள் ஜனவரி 15 மதியமே லக்னோ வந்த டைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கை, தமிழ்நாட்டின் பாரம்பரி யத் திருவிழாவான பொங்கல் திருநாளைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்திருப்பதாக மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் திருவிழா ஜனவரி 14 முதல் 17 &nbsp;வரை கொண்டாடப்படும் நிலையில், தமிழ கத்தைச் சேர்ந்த வங்கி அதிகாரிகள், முக்கிய மான இந்த விழாவை தங்களது குடும்பத்தினரு டன் கொண்டாட முடியாத வகையில், வெகு தொலைவில் உள்ள லக்னோவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளதாக தெரிவித்துள்ளார். பொங்கல் என்பது தமிழர்களின் வாழ்விய லோடும், கலாச்சார உணர்வுகளோடும் நெருக்க மாக இணைந்த ஒரு முக்கியத் திருவிழா என்றும், இத்தகைய நாட்களில் கூட்டங்களை நடத்துவது அதிகாரிகளின் மனநிலையை பாதிப்பதோடு, அவர்களின் கலாச்சார உணர்வு களையும் காயப்படுத்தும் செயலாகும் என்று சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றையும் சு. வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ளார். &nbsp;அந்தக் கடிதத்தில், &ldquo;பன்முகத்தன்மை கொண்ட இந்திய நாட்டில் மாநிலங்களின் பண் பாட்டு மற்றும் பாரம்பரிய உணர்வுகளை மதிப்பது &nbsp;அவசியம்&rdquo; எனவும், &ldquo;தமிழர்களின் உணர்வுகளுக்கு &nbsp;மதிப்பளிக்கும் வகையில் ஜனவரி 16 மற்றும் 17-இல் நடைபெறவுள்ள யூனியன் வங்கியின் மண்டல மற்றும் பிராந்திய மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்க யூனியன் வங்கி நிர்வாகத்திற்கு அறி வுறுத்த வேண்டும்&rdquo; எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். &ldquo;பொங்கல் போன்ற முக்கியத் திருவிழா நாட்க ளில் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்&rdquo; என்றும், &ldquo;இது குறித்து உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என்றும் சு. வெங்க டேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.