தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

9 Dec 2025, 4:25 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

வடகொரியாவுடன் இணக்கத்தை உருவாக்கும் டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் புதிய உலகளா விய பாதுகாப்புத் திட்டத்தை வெளியிட்டார். அதில் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால கோரிக்கையை கைவிட்டுள் ளார். 2026 இல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்குவதற்காக அந்த கோரிக்கையை தற்காலிகமாக அவர் நீக்கி இருக்க லாம் என கூறப்படுகிறது. கடைசியாக இரு நாட்டு  தலைவர்க ளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை 2019 இல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை  டிரம்ப்புக்கு அனுப்புவோம்: ஜெலென்ஸ்கி

உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவ தற்கான அமைதித் திட்ட வரைவு தொடர்பாக இங்கி லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப் பிய தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்தித் தார். அதன் பிறகு கொடுத்த பேட்டியில் இந்த வரைவு திட்டத்தில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இணைந்து சில திருத்தங்களை மேற்கொள்வார்கள். அது ஒரு நாளில்  முடிவடையும் அதன் பிறகு நாங்கள் அதனை சரி பார்த்து விட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

நைஜீரியா:கடத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் மீட்பு

நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் கடந்த நவம் பர் 21 அன்று ஒரு பள்ளியின் மீது தாக்குதல் நடத்தி 315 மாணவர்கள் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். தற்போது அவர்களில் 100 மாணவர்களை மீட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி போலா டினுபு அறிவித்துள்ளார். தற்போது மீதமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்களை  மீட்கும் முயற்சிகளைத் தொடரு மாறு பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பாக் - ஆப்கன் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல்

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் பகுதி பாதுகாப்புச் சாவடியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஆறு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானில் செயல்படும் தெஹ்ரீக்- இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள் ளது. இந்த அமைப்புக்கு ஆப்கன் ஆதரவு தருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

லெபனானில் இஸ்ரேல்  வான்வெளித் தாக்குதல்

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது வான் வெளித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.  லெபனா னின் தெற்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா அமைப் பின் முகாம், ராணுவ கட்டமைப்பு கள் மீது செவ்வாயன்று இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. எனினும் இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பு முறித்துக்கொள்ள முயன்றதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது என கூறியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.