முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!
8 Apr 2026, 5:30 am
<p><strong>முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!</strong></p><p>பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், இந்த தொகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் மற்றும் சாலை வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இந்த தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியம் என்றார்.</p>
