துன்பத்தில் வாடும் முதியோர்களுக்கு மாற்றம் வருமா ?
16 Dec 2025, 6:10 pm
<p><strong>துன்பத்தில் வாடும் முதியோர்களுக்கு மாற்றம் வருமா ?</strong></p>
<p>உடுமலை, டிச.16 – உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், ரேசன் பொருட்கள் மற்றும் முதியோர் உதவித் தொகை பெற கைரேகை பதிவு செய்ய முடியாத முதிய வர்களுக்கு மாற்று வழியில் பொருட்கள் வழங்கவும், முதியோர் உதவித் தொகை எளிய முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்ற னர். தற்போது அனைத்துத் துறைகளி லும் ஆன்லைன் மூலம் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதனால் ஒரு வகையில் நன்மை ஏற்பட்டாலும், பல வகைகளில் பொது மக்கள் கடுமையா கப் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயதான முதியோர்களுக்குப் பாதிப்பு அதிகமாக உள்ளது. ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க ஆன்லைன் செயல்முறைக்கு மாற்றப்பட்டதால், கைரேகை வைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பல முதிய வர்களுக்குக் கைரேகை சரியாக வருவ தில்லை. மேலும், தெளிவாகப் பதிவு செய்ய முடியாத நிலையும் உள்ளது. மேலும், உடுமலை மற்றும் மடத்துக்கு ளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நியாய விலைக் கடைகளில் கண்விழி ஸ்கேனர் பயன்படுத்தி பொருட்களைப் பெறலாம் எனினும், கண்விழி பதியும் இயந்திரம் பல மாதங்களாகப் பழுதடைந்துள்ள தாகக் கடை ஊழியர்கள் தெரிவிப்பதாக முதியவர்கள் கூறினர். இதனால், ரேசன் பொருட்களை வாங்க முடியாமல் திண் டாடுவதாக வேதனையுடன் தெரிவிக் கின்றனர். அதேபோல், முதியோர் உதவித் தொகை வாங்குபவர்களுக்கு முன்பு தபால் மூலம் உதவித்தொகை வீட் டுக்கே வந்தது. ஆனால் தற்போது முழு மையாக வங்கிகள் மூலம் தொகை வழங்கப்படுவதால், வயதானோர் வங் கிகளுக்குச் செல்ல முடியாமல் தவிக் கின்றனர். பலருக்கு வங்கி நடைமுறை களைப் புரிந்து கொள்ள முடியாமல் பணம் பெற முடியாத நிலை உள்ளது. கிராமப்புறங்களில் வாழும் முதியவர் கள் தொகையை வாங்க தனியாக வாக னம் மூலம் பயணிக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. வயதானோரின் வாழ்வாதாரமாக வழங்கப்படும் இத்தொகையை எளிதாகப் பெறுவ தற்கான தீர்வுகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன. இந்நிலையில், முதியவர்கள் ரேசன் பொருட்களை வாங்க எளிமையான முறையை நடைமுறைப்படுத்த வேண் டும். உதவித் தொகையை ரேசன் பொருட்களை போலவே வீடுக ளுக்கு சென்று வழங்க வேண்டும். வங் கிகள் முதியோருக்கான தனி ஏடிஎம் அட்டைகளை வழங்க வேண்டும் என் றும், ஓய்வூதியம் பெறும் இப்பகுதி முதி யவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொழில்நுட்ப மாற்றங்கள் அனைவருக் கும் அணுகக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்பதே அவர்களின் கோரிக் கையாக உள்ளது. இது குறித்து நியாய விலை கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ஏற்க னவே எடை சரிபார்ப்பு, பில் போடுவ தற்கு போதுமான ஆட்கள் இல்லை. ஒரு வருக்கு பொருள் வழங்கவே அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்நிலை யில், வயதானவர்களுக்கு ரேகை பதி வாவதில்லை. கண்விழி ஸ்கேன் என்ற ஆப்ஷன் காட்டுவதில்லை. இதனால் முதியவர்களுக்கு பொருட்கள் வழங்கு வதில் சிக்கல் உள்ளது. மேலும், மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக தனி வட் டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள் ளது. விரைவில் தீர்வு காணுவதாக தெரி வித்திருப்பதாக கூறினார்.</p>
