தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல் ஈரப்பதம் உயர்த்தும் கோரிக்கையையும் நிராகரிப்பதா? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கண்டனம்

20 Nov 2025, 3:46 pm
நெல் ஈரப்பதம் உயர்த்தும்  கோரிக்கையையும் நிராகரிப்பதா? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கண்டனம்
<p><strong>நெல் ஈரப்பதம் உயர்த்தும் &nbsp;கோரிக்கையையும் நிராகரிப்பதா? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கண்டனம்</strong></p> <p>சென்னை, நவ. 20 - கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல் மணிகளைக் கொள் முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ள நிலை யில், &lsquo;விவசாயிகளின் அழு குரல் ஏன் கேட்க வில்லையா?&rsquo; என முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தமது சமூகவலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை. அதற்குள் நெல் கொள்முத லில் ஈரப்பதம் தளர்வு தொடர் பான நமது கோரிக்கையை யும் நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு. கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்ப டையில் இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? கனமழையால் பாதிக்கப் பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்கா மல் இருப்பது விவசாயி களுக்கு எவ்வாறு நன்மை செய்யும்? உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்து தமிழ் நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுக்க வேண்டும்&rdquo; என்றும் ஒன்றிய அரசை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.