தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல ஆண்டுகளான பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா?

15 Feb 2026, 3:03 pm
பல ஆண்டுகளான பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா?
<p><strong>பல ஆண்டுகளான பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமா?</strong></p> <p>இயற்கை எழில் கொஞ்சம் நீல கிரி, உலக சுற்றுலா வரை படத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். இங்கு தமிழ்நாட் டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேர ளம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் &nbsp;வெளி நாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். குறிப்பாக, குறுகிய &nbsp;நகரமான உதகைக்கு வரும் சுற்று லாப் பயணிகள் பெரும்பாலா னோர் தங்களது சொந்த வாக னங்களிலும், சுற்றுலா வாகனங்க ளிலும் வருகை புரிகின்றனர். இவ் வாறு வரும் சுற்றுலாப் பயணிக ளின் வாகனங்களால் ஆண்டு தோறும் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு &nbsp;முக்கிய காரணம் உதகை நகரில் &nbsp;புதிய பார்க்கிங் வசதி இல்லாத தால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் &nbsp;உள்ளூர் மக்கள் பெரும் இன்னல் களுக்குள்ளாகி வருகின்றனர். &nbsp;இது நாள் வரை உதகை நகரில் &nbsp;பல ஆண்டுகளாக நிலவி வரும் &nbsp;பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு &nbsp;காணப்படாதது உள்ளூர் மக்களி டையே கடும் அதிருப்தியை ஏற்ப டுத்தி வருகிறது. இந்நிலையில், உதகை மையப் பகுதியில் அமைந் துள்ள குதிரை பந்தைய மைதா னத்தை, மெட்ராஸ் ரேஸ் கிளப் &nbsp;உதகை நகராட்சிக்கு பல கோடி &nbsp;ரூபாய் வருவாய் செலுத்தாததால் &nbsp;கடந்தாண்டு வருவாய்த் துறையி னர் சுமார் 54 ஏக்கர் நிலத்தை &nbsp;கையகப்படுத்தி தோட்டக்கலைத் துறையினரிடம் ஒப்படைத்துள்ள னர். இந்நிலையில், அந்த 54 ஏக்கர் பரப்பளவில் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூழலியல் பூங்கா அமைக்கப்படும் என தமி ழக அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. &nbsp;உதகை நகரில் சுற்றுலாப் பய ணிகள் கண்டு ரசிக்கும் வகை யில் உலக புகழ்பெற்ற அரசு தாவர வியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா &nbsp;பூங்கா, தேயிலை பூங்கா, மரவி யல் பூங்கா, கர்நாடக அரசின் கர்நாடக பூங்கா உள்ளிட்ட பூங் காக்கள் உள்ள நிலையில், உதகை &nbsp;நகராட்சி கட்டுப்பாட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட சாலையோர பூங்காக்கள் உள்ளது. தற்போது தோட்டக்கலைத்துறை மற்றும் நக ராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் வாகன நிறுத்துமி டம் உள்ளிட்ட அடிப்படை வசதி களின்றி போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. &nbsp;எனவே, குதிரை பந்தய மைதானத்தில் அதிநவீன வசதி களுடன் கூடிய பல அடுக்கு பார்க் கிங் தளத்தை அமைக்க வேண்டும். &nbsp;இதனால் உதகை நகரில் பல ஆண்டுகளாக நிலவி வரும் பார்க் கிங் பிரச்சனைக்கு தீர்வு காணப்ப டும். எனவே, தமிழக அரசு சூழலியல் &nbsp;பூங்கா அமைக்க 70 கோடி ரூபாய் &nbsp;நிதி ஒதுக்கியுள்ள நிலையில், இதற்கு மாற்றாக அதிநவீன வசதி களுடன் கூடிய பல அடுக்கு பார்க் கிங் தளத்தை ஏற்படுத்தி தர வேண் டும், என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ஷேக் அமீன், உதகை</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.