தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரசவத்தில் தப்பிப்பாரா கென்யா பெண்?

19 Nov 2025, 3:33 pm
பிரசவத்தில் தப்பிப்பாரா கென்யா பெண்?
<p><strong>பிரசவத்தில் தப்பிப்பாரா கென்யா பெண்?</strong></p> <p>தென் ஆப்பிரிக்கா தலைமை வகிக்கும் G20 அமைத்த ஆய்வுக்குழு &nbsp;உலகளாவிய சமத்துவமின்மைகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆய்வுக் குழுவின் தலைவராக பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் இருந்துள்ளார். இதன் அறிக்கை அதிர்ச்சி தரத்தக்க பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. &nbsp; 83 % நாடுகள் சமத்துவமின்மை உடைய நாடுகளாக விளங்குகின்றன. இங்கு வாழும் மக்கள் உலக மக்கள் தொகையில் 90 % ஆக உள்ளனர். உலக அளவில் 2000&ndash;2024 காலத்தில் உருவான புதிய செல்வத்தின் 41% ஐ மேல்தட்டில் உள்ள டாப் 1% பேர் கைப்பற்றியுள்ளனர்; அதே சமயம் அடித்தளத்தில் உழலும் 50% மக்களுக்கு வெறும் 1% மட்டுமே கிடைத்துள்ளது. &nbsp;இந்தியாவில் டாப் 1% பேர் தங்களின் செல்வப் பங்கை 62% அதிகரித்துள்ளனர். இங்கு பொருளாதார வளர்ச்சி இருப்பதாக தம்பட்டம் அடிக்கப்பட்டாலும் வளர்ச்சியின் பயன்கள் யாரிடம் போய்ச் சேர்ந்திருக்கின்றன என்பதை இந்த ஆய்வு அம்பலப்படுத்தி இருக்கிறது. வளர்ச்சியும் சமத்துவமின்மையும் ஒரு சேர வளர்வது பொருளாதார மறு பங்கீட்டில் நிகழும் அநீதிக்கு சாட்சியமாகும். &nbsp;2020க்கு பின் உலகளாவிய வறுமை குறைப்பு மந்தமடைந்துள்ளது. 230 கோடி மக்கள் உணவுக் குறைபாடுடன் வாழ்கின்றனர், மேலும் 130 கோடி பேர் தனியார் மருத்துவச் செலவுகளால் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். &ldquo;சமத்துவமின்மை அதிகரித்துள்ள நாடுகளில் ஜனநாயக உரிமைகள் அரிக்கப்படும் வாய்ப்பு சமத்துவம் நிலவும் நாடுகளை விடஏழு மடங்கு அதிகமாக உள்ளது.&rdquo; என்கிறது அறிக்கை. &nbsp; &ldquo;கென்யாவில் இருக்கும் ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கும் வாய்ப்பு ஸ்வீடன் பெண்ணை விட 37 மடங்கு அதிகம்&rdquo; என்ற அறிக்கை மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வை மட்டுமின்றி, நாடுகளுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வையும் வெளிக் கொணர்ந்து அதிர வைக்கிறது. &nbsp; இந்த ஆய்வு அறிக்கையை இணைத்து எழுதியுள்ள கடிதத்தில் நிபுணர்கள் கூறி இருக்கும் கருத்துக்கள் மிக முக்கியமானவை. &nbsp; &ldquo;செல்வத்தின் அதீதக் குவிப்புகள், ஜனநாயக விரோதமான அதிகாரக் குவிப்புகளாக மாறுகின்றன. நமது சமூகங்களில் நம்பிக்கையை சிதைத்து, தீவிரமாகப் பிளவுபடுத்துகின்றன என்பதை ஆழ்ந்த கவலையுடன் பதிவு செய்கிறோம். சமத்துவமின்மை என்பது தவிர்க்க முடியாத ஒன்று அல்ல; அது ஒரு கொள்கைத் தேர்வு&rdquo; க.சுவாமிநாதன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.