தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நகரத்தின் தூய்மையை போற்றிப் பேணி காக்கும் தூய்மைப் பணியாளர்களின் குறைகள் தீர்க்கப்படுமா?

14 Dec 2025, 3:45 pm
நகரத்தின் தூய்மையை போற்றிப் பேணி காக்கும் தூய்மைப் பணியாளர்களின் குறைகள் தீர்க்கப்படுமா?
<p><strong>நகரத்தின் தூய்மையை போற்றிப் பேணி காக்கும் தூய்மைப் பணியாளர்களின் குறைகள் தீர்க்கப்படுமா?</strong></p> <p>ஈரோடு மாநகராட்சி 60 வார்டு களைக் கொண்டது. 4 மண்டலங் களிலும் சுமார் 2 ஆயிரம் தூய்மைப் &nbsp;பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நாள்தோறும் காலை 6 மணிக்கு வருகையை பதிவு செய்து, அதன் பிறகு ஒதுக் கப்படும் பணிகளை செய்கின்ற னர். வீடுகள் தோறும் சென்று குப்பைகளை பெறுகின்றனர். இவற்றை மக்கும், மக்காத குப்பை &nbsp;என பிரித்து கிடங்கில் கொண்டு போய் சேர்ப்பது வாடிக்கையான ஒன்று. தெருக்களில் தேங்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் குப்பை களையும் அகற்ற வேண்டும். நாள் தோறும் சுமார் 250 டன் குப்பை களை அகற்றுகின்றனர். மேலும், சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுநீர் ஓடைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பணி நேரம் 8 மணி நேரம் எனக் கூறப்பட்டாலும், பணி முடிய பிற் பகல் 3 அல்லது மாலை 4 மணி ஆகிவிடுகிறது. இப்பணிகளில் ஈடுபடும் தூய் மைப் பணியாளர்கள் மொடக் குறிச்சி, சென்னிமலை, பெருந் துறை, கவுந்தப்பாடி, பவானி, குமா ரபாளையம் போன்ற பகுதிகளிலி ருந்தும் வருகின்றனர். வருகை பதிவு செய்ய குறித்த நேரத்தில் வந்து சேர வேண்டும். இதனால் அதிகாலையில் எழுந்து புறப் பட்டு வருவதற்குள் உணவு சமைத்து எடுத்துக் கொண்டு வரு வது சாதாரணமாக நடப்பதல்ல. அருகில் வசிப்போரும் வேலைக்கு இடையில் வீட்டிற் குச் சென்று உணவருந்த முடி யாது. எனவே, காலையில் சிற் றுண்டியை கடையில் வாங்கித் தான் சாப்பிட வேண்டும். இடை யில் தேநீர், இணை உணவு ஏதா வது எடுத்துக் கொண்டாலும், மதிய உணவும் கடையில் தான். &nbsp;இருவேளையும் பணம் கொடுத்து தான் சாப்பிட வேண்டும். கணிசமானோர் தினக்கூலி தொழிலாளர்கள் தான். பணி நிரந்த ரம் கேட்டாலும் நிர்வாகம் மறுக்கி றது. போராட்டம் நடத்தினாலும் பயனில்லை. 280 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றினால் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அமல் படுத்தப்படுவதில்லை. சட்டப்படி பணி நிரந்தரம் வழங்கு என வழக்கு தொடுத்தாலும், தூய் மைப் பணியாளர்கள் எங்கள் நேரடி தொழிலாளர்கள் அல்ல, &nbsp;சுய உதவிக்குழு மூலம் அல்லது &nbsp;ஒப்பந்ததாரர் மூலம் வேலை &nbsp;செய்வோர் என்றும், அவர்க ளுக்கு பணி நிரந்தரம் வழங்க &nbsp;முடியாது என எதிர் வழக்காடு கிறது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன் றிய அரசு தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு திட்டம் என்ற பெயரில் மாவட்ட அளவில் ஒரு கூட்டம் நடத்துகிறது. மாநில அரசும் சில &nbsp;திட்டங்களை அறிவிக்கிறது. மாவட்ட ஆட்சியரும் குறைதீர் கூட் டங்களை நடத்துகிறார். ஆனால், &nbsp;பணி நிரந்தரம் என்ற பிரதான &nbsp;கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை. இதற்கிடையில் 3 வேளை உணவு இலவசம் என &nbsp;முதல்வர் அறிவிப்பு அறிவிப் பாகவே உள்ளது. ஈரோட்டில் எப் போது நிறைவேறும்? என்று கேள்வி எழுப்புகின்றனர். மேலும், &nbsp;ஒன்றிய அரசு தற்போது அமல் படுத்தியுள்ள புதிய தொழிலாளர் (விரோத) தொகுப்பு சட்டங்க ளால், மேலும் பாதிப்புகள் ஏற்படும் &nbsp;என அச்சத்தில் தூய்மைப் பணியா ளர்கள் உள்ளனர். -சக்திவேல், ஈரோடு</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.