விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவு திட்டம் புது வருடத்தில் நிறைவேறுமா?
31 Dec 2025, 3:37 pm
<p><strong>விவசாயிகளின் 50 ஆண்டு கால கனவு திட்டம் புது வருடத்தில் நிறைவேறுமா?</strong></p>
<p>உடுமலை,டிச.31- அமராவதி அணை நிரம்பி உபரிநீர் ஆற்றில் வெளியேற்படுவதை தடுக்கும் வகையில், உபரி நீரை சேமிக்க அமரா வதி அணைக்கு மேல் பகுதியில் அப்பர் அமராவதி அணை என்றும், திருமூர்த்தி அணைக்கு எளிமையாக தண்ணீர் கொண்டுவரவும், சேமிக்கவும் நல் லாறு அணை கட்ட 50 ஆண்டுக்கு முன் அடிக்கல் நடப்பட்டது. இந்த புதிய ஆண் டிலாவது இத்திட்டம் நிறைவேற்றப் படுமா என விவசாயிகளின் எதிர்பார்க் கின்றனர். அப்பர் அமராவதி திட்டம்: அமராவதி அணைக்கு நீர் ஆதார மாக உள்ள பாம்பாறு, தேனாறு, சின் னாறு ஆகிய மூன்று ஆறுகள் இணைந்து, கூட்டாறு ஆற்றில் துவானம் அருவி அமைந்துள்ள இடத்தில் மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் அப்பர் அமராவதி அணை என்ற பெய ரில் ஒரு தடுப்பு அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த அணையில் சுமார் 5 டிஎம்சி நீரை சேமித்து வைத்து, நீர் மின்சாரம் உற்பத்தி செய்வதுடன், கோடை காலங்களில் அப்பர் அமரா வதி அணையில் இருந்து தண்ணீரை அமராவதி அணைக்கு கொண்டு செல்ல முடியும். நல்லாறு அணை திட்டம்: பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத் தில் கட்டப்பட்ட திருமூர்த்தி அணைக்கு மேல்நீராறு அணை வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தண்ணீர் வருகிறது. தண்ணீர் வரும் தூரத்தை குறைக்கும் வகையிலும் கூடு தலாக தண்ணீரை சேமிக்கும் வகை யில், திருமூர்த்தி அணையில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவடப்பு பகுதியில் இருக்கும் நல்லாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டம் வகுக்கப்பட்டு அடிக்கல் நாட் டப்பட்டது. நல்லாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் வந்து சேரும். மேலும், கூடுதலாக மழை காலங்களில் தண்ணீரை சேமித்து வைத்து கொள்ள முடியும். இதனால் சுமார் 8 டிஎம்சி தண் ணீர் திருமூர்த்தி அணைக்கு வறட்சி காலங்களில் கிடைக்கும். எனவே புதிய அணைகள் கட்ட ஆய் வுகள் மேற்கொண்டு, அடிக்கல் நடப் பட்டு ஐம்பது வருடங்களுக்கு மேலாக திட்டம் மட்டுமே உள்ளது. நடைமு றைக்கு வரவில்லை. புதிய ஆண்டிலா வது இந்தக் கனவு திட்ட அணைக ளைக் கட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.</p>
