முந்தய பக்கம்

சேதமடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அகற்றப்படுமா?

1 Feb 2026, 3:51 pm
சேதமடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அகற்றப்படுமா?
<p><strong>சேதமடைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் அகற்றப்படுமா?</strong></p> <p>பாபநாசம், பிப்.1 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை அருகே கணபதி அக்ரஹா ரத்தில் மெயின் சாலையையொட்டி உள்ள வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் சேதமடைந்து, பயன்பாடின்றி, மரக்கன்றுகள் வளர்ந்து, இடிந்து விழும் &nbsp;நிலையில் உள்ளது. &nbsp;55 ஆண்டுகளை கடந்த இந்த கட்ட டத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட நிதி ஒதுக்கீடு &nbsp;செய்தும், சேதமடைந்த பழைய கட்டடத்தை இடிக்கவோ, புதிதாக கட்டடம் கட்டவோ தற்போது &nbsp;வரை நடவடிக்கை எடுக்கவில்லை. குறைதீர் கூட்டங்களில் பழுதடைந்த இந்த கட்டடம் தொடர்பாக, விவசாயிகள் தரப்பில் பேசியும், நட வடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. &nbsp;சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலை யில், பழுதடைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட &nbsp;மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க் கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram