தை பிறந்தால் கலகத்திற்கு வழி பிறக்குமா? அர்ஜுன் சம்பத்தின் மதவெறிப் பிதற்றல்!
2 Jan 2026, 3:33 pm
<p><strong>தை பிறந்தால் கலகத்திற்கு வழி பிறக்குமா? அர்ஜுன் சம்பத்தின் மதவெறிப் பிதற்றல்!</strong></p>
<p>சக்தி ஆன்மீகக் குழு என்ற அமைப்பின் ஏகாதசி விழா வில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பொங்கல் பண்டிகையைச் சுற்றிக் கடும் மதவெறி யைக் கக்கியுள்ளார். பொங்கல் என்பது தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா என்பதை மறைத்து, அது ஒரு ‘சனாதன இந்து பண்டிகை’ எனப் புதுப்புது விளக்கங்களைத் தந்துள்ளார். “திமுக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஏன் கிறிஸ்தவர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்க வேண்டும்? பொங்கல் வைப்பவர் களுக்கு மட்டும் கொடுத்தால் போதாதா?” என்று அவர் கேள்வி எழுப்பியது, அவ ரது ஆழ்மன வெறுப்பை அப்பட்டமாகக் காட்டுகிறது. சமத்துவப் பொங்கல், மத நல்லிணக்கப் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடக் கூடாது என அவர் கட்டளையிடுகிறார். உழவையும், அறுவடையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் விழாவிற்கு, தேவையற்ற மதச் சாயம் பூசுகிறார். ஆடி விதைப்பு தொடங்கித் தை அறுவடை வரை உழவரின் உழைப்பைப் போற்றும் மருதகாசியின் பாடலோ அல்லது உழவே தலை என உலகைப் பொதுவாய் நோக்கிய வள்ளு வரோ அர்ஜுன் சம்பத்தின் கண் களுக்குத் தெரிவதில்லை. மாறாக, மே தினத்தை ‘விஸ்வகர்மா ஜெயந்தி’ என்றும், குழந்தைகள் தினத்தை ‘வீர் பால் திவாஸ்’ என்றும் மாற்றி, எல்லா வற்றையும் காவிமயமாக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-இன் திட்டத்தைத்தான் இவர் தமிழ்நாட்டில் அமல்படுத்தப் பார்க்கிறார். குன்றத்தில் நினைத்தது நடக்க வில்லை என்றதும், தையில் கலகம் செய்ய வழி பிறக்குமா என அவர் காத்தி ருக்கிறார் போலும். தமிழர்களின் முற் போக்கு பாரம்பரியம் மிக்க பொங்கல் விழாவைச் சமத்துவ விழாவாகவும், மத நல்லிணக்க விழாவாகவும் விழிப்புடன் காக்க வேண்டிய அவசியத்தை அர்ஜுன் சம்பத்தின் இந்தப் பேட்டி தமிழக மக்களுக்கு உணர்த்துகிறது. - வசந்தன்</p>
