பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நிதி வழங்குவாராம்! அஜித் பவாரை தொடர்ந்து ஒன்றிய உள்துறை இணையமைச்சரும் மிரட்டல்
28 Nov 2025, 2:28 pm
<p><strong>பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நிதி வழங்குவாராம்! அஜித் பவாரை தொடர்ந்து ஒன்றிய உள்துறை இணையமைச்சரும் மிரட்டல்</strong></p>
<p>ஹைதராபாத் தெலுங்கானாவில் டிசம்பர் 11,14,17 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறு கிறது. இந்த தேர்தலில் பாஜக வேட்பா ளருக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் மட்டுமே தொகுதி மேம்பாட்டு நிதி வழங்குவேன் என ஒன்றிய உள்துறை இணையமைச்சரும், கரீம்நகர் (தெலுங்கானா) நாடாளுமன்றத் தொகு தியின் பாஜக எம்.பி.,யுமான பண்டி சஞ்சய் குமார் சர்ச்சைக்குரிய வகையில் கூறியுள்ளார். வெறுப்புப் பேச்சுக்கு பெயர் பெற்ற பண்டி சஞ்சய் குமார் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறுகையில், “கரீம்நகர் தொகுதிக்குட்பட்ட கிராம வாசிகளே, பாஜக ஆதரவு பெற்ற வேட்பாளர்களை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால், கிராமங்களின் வளர்ச்சிக்கு நான் நேரடியாக ரூ.10 லட்சத்தை நிதியளிப்பேன்” என பாஜக விற்கு வாக்களித்தால் மட்டுமே நிதி வழங்குவேன் என்று பொதுமக்களை மிரட்டும் நோக்கத்தில் கூறியுள்ளார். ஒருநாட்டின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்பை கவனிக்கும் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் இந்த அடாவடி பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனம் குவிந்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரம் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார், “மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில், எனது கட்சி (தேசியவாத காங்கிரஸ்) வேட்பாளரை புறக்கணித்தால் நிதி வழங்க மாட்டேன்” என மாலேகானில் பொது மேடையிலேயே மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
