முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!
8 Apr 2026, 5:30 am

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்!

பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளர் பி.பழனியப்பன் உறுதி. தருமபுரி, ஏப்.7: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை தமிழகத்திலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என திமுக வேட்பாளர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தத் தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விவசாயிகளின் நலன் காக்கப்படும் என உறுதி அளித்தார்.