தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

7 Mar 2026, 2:36 pm
விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைக்குமா இந்தியா?

10ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடர் பிப்., 7ஆம் தேதி இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன், இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, நேபாளம், இத்தாலி, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா என மொத்தம் 20 நாடுகள் இந்த தொடரில் கலந்து கொண்டன. இந்தியா - நியூஸிலாந்து லீக் சுற்று முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 அணிகள் ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் 8 சுற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்த வாரம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - இங்கிலாந்து அணியையும், நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணியையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் இறுதி ஆட்டம் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. நியூஸிலாந்து அணி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. அதன்பிறகு, தற்போது 2ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறிய நியூஸிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. அதே போல 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடப்பு சாம்பியனான இந்தியா 3ஆவது முறையாக உலகக்கோப்பை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இரு அணிகளும் கோப்பை மீது குறியாக களமிறங்குவதால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் மிக மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலாறு இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றால், அதிக முறை டி-20 உலகக்கோப்பை வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி படைக்கும். தற்போது  மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, இந்தியா ஆகியவை தலா இரண்டு முறை டி-20 உலகக்கோப்பையை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இடம்

: அகமதாபாத், குஜராத் நேரம் : இரவு 7 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி) மழை : வாய்ப்பில்லை

ரூ.120 கோடி பரிசுத்தொகை

சாம்பியன் பட்டம் : ரூ. 27.48 கோடி 2ஆம் இடம் : ரூ. 14.65 கோடி அரையிறுதியில் வெளியேறிய அணிகள் : தலா ரூ.7.23 கோடி 5 முதல் 12ஆவது இடம் வரை : தலா ரூ.3.48 கோடி 13 முதல் 20-வது இடம் வரை : ரூ. 2.29 கோடி (மொத்தம் : ரூ.120 கோடி பரிசுத்தொகையாகும். இது கடந்த 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை விட 20% அதிகமாகும்)

மைதானம் எப்படி?

இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பவுன்ஸ் கொடுக்கக்கூடியது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் திருப்பம் இருக்காது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து, பின்னர் பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வெற்றியை ருசிக்க வாய்ப்புள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.