முந்தய பக்கம்

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன்!

11 Apr 2026, 5:30 am
நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன்!

நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவேன்!

திமுக வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதி தருமபுரி, ஏப்.10- "நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் குமார் வாக்குறுதியளித்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி.என்.செந்தில்குமார், நல்லம்பட்டி, அத்தனுார்அள்ளி, கொலசனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் வெள்ளியன்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அடிப்படை வசதியான குடிநீர், சாலை, பேருந்து வசதி குறித்து பொதுமக்கள் முன்வைத்தனர்.

இதைக்கேட்ட வேட்பாளர், நிச்சயம் தங்களுக்கு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும். மேலும், அலியாளம் - தூள்செட்டி ஏரி இணைப்பு கால்வாய் திட்டம், தெற்கத்திகாவ் புங்கார கால்வாய் திட்டம், எண்ணேகொல்புதூர் - தும்பலஅள்ளி இணைப்பு கால்வாய் திட்டம் ஆகிய நீர் பாசன திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

இந்நிகழ்வில், தொகுதி பார்வையாளர் டி.அன்பழகன், மாநில விவசாய அணி துணைச்செயலாளர் சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர் அன்பழகன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram