முந்தய பக்கம்

திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்

7 Apr 2026, 5:42 pm
திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்
<p>திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.ரவி, செவ்வாய் அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பி.சண்முகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். &nbsp;இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி, வடக்கு தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர், திமுக வடக்கு செயலாளர் தங்கராஜ், தேர்தல் பணிக்குழு செயலாளர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பி.ஆர். நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p> <p>ஈரோடு மாவட்டம், பவானிசாகர் (தனி) தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.எல்.சுந்தரம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram