முந்தய பக்கம்

பா.ஜ.க-விடம் அன்புமணி கேட்பாரா?

2 Apr 2026, 3:50 pm
பா.ஜ.க-விடம் அன்புமணி கேட்பாரா?
<p><strong>பா.ஜ.க-விடம் அன்புமணி கேட்பாரா?</strong></p> <p>மதம் மாறியவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கச் சட்டத்திருத்தம் செய்யப்படும் எனப் பா.ம.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பா.ம.க. அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் பா.ஜ.க, இந்தக் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. கிறித்தவம் அல்லது இஸ்லாத்தைத் தழுவும் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலையில், பா.ஜ.க-விடம் அன்புமணி இந்த உரிமையைக் கேட்டுப் பெறுவாரா? அல்லது இது வெறும் தேர்தல் ஏமாற்று வேலையா? அதேபோல், நீட் விலக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் பெறப்படும் என்கிறது பா.ம.க. அறிக்கை. அப்படியென்றால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதைப் பா.ம.க. அங்கீகரிக்கிறதா? முரண்பாடுகளின் மொத்த உருவமாகப் பா.ம.க. மாறி நிற்பது அப்பட்டமாகத் தெரிகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram