தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைமேம்பாலம் அமைக்கப்படுமா?

9 Dec 2025, 4:25 pm
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைமேம்பாலம் அமைக்கப்படுமா?
<p><strong>திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைமேம்பாலம் அமைக்கப்படுமா?</strong></p> <p>திருப்பூர், டிச.9 - ஆயிரக்கணக்கான மாணவிகள், &nbsp;பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர் கள் அன்றாடம் செல்லும் திருப்பூர் &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம் அமைந்துள்ள பல்லடம் சாலைப் &nbsp;பகுதியில் நடைமேம்பாலம் கட்டப் பட வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது. பல்லடம் சாலை நகரின் நிர்வாக இதயமாக செயல்படுகிறது. மாவட்ட &nbsp;ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மட் டும் பள்ளி கல்வித்துறை, வேலை வாய்ப்புத் துறை, மாற்றுத்திறனாளி கள் நலத்துறை, இ-சேவை மையம், &nbsp;ஆதார் மையம், அரசு கருவூலம், சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை உள்ளிட்ட பல்வேறு முக் கிய அரசுத் துறைகள் இயங்குகின் றன. இவற்றுடன், அருகிலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகி யவற்றிற்கு நாள்தோறும் வழக்கறி ஞர்கள், காவலர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான மக்கள் வந்து செல்கின்ற னர். மேலும் அருகில் ஆயிரக்கணக் கான மாணவிகள் பயிலும் எல்ஆர்ஜி &nbsp;அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைந் துள்ளது. பழைய பேருந்து நிலையத் தில் இருந்து பேருந்துகளில் வரு வோர் இந்த வளாகங்களுக்குச் செல்ல, பல்லடம் சாலையைக் கடக்க &nbsp;வேண்டியுள்ளது. திருப்பூரை அண்டை மாவட்டங்களுடன் இணைக்கும் இந்தப் பிரதான சாலை யில், போக்குவரத்து பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. &nbsp;காலை, மாலை நேரங்களில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து காணப்ப டும். அப்போது சாலையைக் கடக்க &nbsp;முயலும் மாணவிகள் மற்றும் பணியா ளர்கள் பெரும் இடர்பாட்டைச் சந்திக் கின்றனர். &ldquo;காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இந்த சாலையைக் கடப்பது ஒரு பயங்கரமான அனு பவம், என்று எல்ஆர்ஜி கல்லூரி யில் படிக்கும் மாணவி ஒருவர் கூறு கிறார். வாகனங்கள் வேகமாக வரு கின்றன. வேகத்தடை இருந்தாலும் கூட, கட்டுப்பாடின்றி வாகனங்கள் விரைந்து வருவதால், நாங்கள் தயங் கித் தயங்கியே கடக்கிறோம். இந்த &nbsp;நிலைமையைத் தீர்க்க, பேருந்து &nbsp;நிறுத்தம், ஆட்சியர் வளாகம் மற்றும் &nbsp;கல்லூரி ஆகியவற்றை இணைக்கும் ஒரு உயர்மட்ட நடைமேம்பாலம் அமைப்பது இப்பிரச்சனைக்கு தீர் வாக இருக்கும். வாகனப் போக்குவ ரத்துக்கு இடையூறு ஏற்படாது என &nbsp;பொதுமக்கள், மாணவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் &nbsp;உடனடியாக தலையீட்டு இத்திட்டத் திற்கான நிதி ஒதுக்கீடு செய்ய &nbsp;வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்ற னர். பல பிரச்சினைகளை ஒரேசமயத் தில் தீர்க்கும் இத்திட்டம், நகரின் &nbsp;வளர்ச்சிக்கு அடையாளமாக விளங் கும் என பொதுமக்கள் நம்புகின்ற னர். மேலும், உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;எதிர்பார்க்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.