தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்லடத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி நிரந்தரத் தீர்வு காண மேம்பாலம் கட்டப்படுமா?

3 Mar 2026, 3:38 pm
பல்லடத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி நிரந்தரத் தீர்வு காண மேம்பாலம் கட்டப்படுமா?
<p><strong>பல்லடத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி நிரந்தரத் தீர்வு காண மேம்பாலம் கட்டப்படுமா?</strong></p> <p>திருப்பூர், மார்ச் 3 - பல்லடம் நகரத்தில் நாளுக்கு நாள் போக் குவரத்து நெருக்கடி கடுமையாக அதிகரித்து &nbsp;வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண பல்ல டம் நகரின் குறுக்காக, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கோவை - திருச்சி &nbsp;தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட &nbsp;வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்ற னர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநக ருக்கு தென் மேற்கு பகுதியில் பல்லடம் நகரம் &nbsp;அமைந்திருக்கிறது. விவசாயம், விசைத்தறி, &nbsp;கோழிப்பண்ணை, பனியன் தொழிற்சாலை கள் என சுற்று வட்டாரப் பகுதிகளில் உரு வாகி இந்நகரம் விரிவடைந்து வருகிறது. &nbsp;கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை இந்நகரைக் கடந்து செல்கிறது. குறிப்பாக பல்லடத்தின் தென் மேற்கே கரடிவாவி, வெங்கட்டாபுரம் செல்லும் கொச்சின் பிராண் டியர் சாலை, வடக்கே திருப்பூர் சாலை, மங்க லம், சாலை, தெற்கே பொள்ளாச்சி, உடு மலை சாலைகள், கிழக்கே தாராபுரம் சாலை &nbsp;ஆகியவை இந்த நகரைக் கடந்து செல்கின் றன. பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் சந் திப்பு மையமான இந்த நகரின் அமைப்பு &nbsp;காரணமாகவும் போக்குவரத்து அதிகளவில் &nbsp;உள்ளது. இதனால் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகளவில் உள்ளது. அவசர மருத்துவ சிகிச்சைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட நெருக்கடியில் சிக்கி உரிய நேரத்தில் பல்ல டம் நகரைக் கடந்து செல்ல முடியாத நிலை &nbsp;உள்ளது. இது தவிர நகருக்குள் அரசு மருத்து வமனை அருகே மாணிக்காபுரம் உள்ளூர் &nbsp;சாலையில் பூமலூர், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்க ணக்கான கல்குவாரி மற்றும் விசைத்தறி சரக்கு லாரிகள் வந்து செல்கின்றன. கோழிப் பண்ணை, கல் குவாரி, விசைத்தறி, பனியன் &nbsp;தொழில் சார்ந்த சரக்குப் போக்குவரத்து அடர்த்தியாக நடைபெறும் மையமாக பல்ல டம் உள்ளது. சுற்று வட்டாரப் பகுதிகளின் வேகமான விரிவாக்கமும் வாகனப் போக்கு வரத்து அதிகரிப்பதற்கு காரணமாக உள் ளது. கோவை சாலை, கொச்சின் பிராண்டியர் சாலை சந்திப்பில் இருந்து பனப்பாளையம் வரை ஏறத்தாழ 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெருக்கடி ஒவ் வொரு நாளும் கடுமையாக உள்ளது. குறிப் பாக அரசு மருத்துவமனை தேசிய நெடுஞ் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நிலை யில் அப்பகுதியில் எப்போதும் போக்கு வரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக் கிறது. உடுமலை வட்டாரத்தில் இருந்து பட் டுக்கூடுகளை ஓசூர் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு பல்லடம், மங்கலம் சாலை வழி யாகத்தான் சத்தியமங்கலம், மைசூர் சாலை யில் செல்கின்றன. எனவே பல்லடத்தில் அதிக ரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு &nbsp;தொலை நோக்கு அடிப்படையில் நிரந்தரத் &nbsp;தீர்வு காண வேண்டும் என பல்லடம் நகர &nbsp;மக்கள் எதிர்பார்க்கின்றனர். &nbsp;தற்போது கோவை சாலை செ்ம்மிபா ளையம் தொடங்கி தெற்கு பகுதி வழியாக பெள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் சாலை களைக் கடந்து செல்லும் புறவழிச் சாலை &nbsp;அமைக்கப்பட்டு வருகிறது. &nbsp;ஆலூத்துப்பா ளையம் வரை செல்லும் இந்த சாலைப் பணி &nbsp;விரைவாக நடைபெறுகிறது, இப்பணி முடிந் தால் பல்லடத்தில் போக்குவரத்து நெருக்கடி &nbsp;குறையும் என்று அரசு நிர்வாகத்தரப்பில் கூறப்படுகிறது. எனினும் புறவழிச் சாலை வந்தாலும் நக ரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெருக் கடி குறையாது. குறிப்பாக மாணிக்காபுரம் சாலை, என்ஜிஆர் சாலை, மங்கலம் சாலை, &nbsp;பொள்ளாச்சி, உடுமலை சாலை, திருப்பூர் &nbsp;சாலை, தாராபுரம் சாலை என அடுத்தடுத்த &nbsp;சாலைகள் நகரப்பகுதியை கடக்கின்றன. எனவே தென்பகுதியில் அமையும் புறவழிச் சாலையால் மட்டும் போக்குவரத்து நெருக் கடி குறையாது. எனவே கோவை - திருச்சி நெடுஞ்சாலையில் கரடிவாவி சாலை சந்திப் பிற்கு முன்பிருந்து பனப்பாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்தால் வெளி யூர் வாகனங்கள் நகருக்குள் வராமல் கடந்து &nbsp;செல்ல முடியும். அதேசமயம் நகரை மையப் படுத்திய போக்குவரத்தும் குறையும். எனவே &nbsp;இந்த பாலம் அமைப்பது தான் பல்லடம் நக ரில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். இது குறித்து அரசு நிர்வா கம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் தொழில், வர்த்தக &nbsp;மற்றும் பொது நல அமைப்பினர் எதிர்பார்க் கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.