முந்தய பக்கம்

பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமையுமா?

13 Feb 2026, 5:58 pm
பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமையுமா?
<p><strong>பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமையுமா?</strong></p> <p>நாமக்கல், பிப். 13- தமிழ்நாட்டின் முக்கிய வெற்றிலை சாகுபடி மையமான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதி விவசாயிகள், தங்களின் நீண்ட கால கோரிக்கையான தனி ஆராய்ச்சி மையத்தை (வெற்றிலை) அமைக்க மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தின் பாண்டமங்கலம், பொத்தனூர், &nbsp;பரமத்தி வேலூர், அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம் மற்றும் நன்செய் இடையாறு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இத்தொழிலை நம்பி விவசாயிகள், வெற்றிலை பறிப்பவர்கள், தரம் பிரிப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் என சுமார் 50,000 பேர் உள்ளனர். தலை முறை தலைமுறையாக விளைவிக்கப்படும் இந்த வெற்றிலை, உள்ளூர் சந்தைகளில் தினசரி விற்பனை செய்யப்படுவதோடு, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பரமத்தி வேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் &nbsp;அமைக்க விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ள னர். பரமத்தி வேலூர் குறிப்பாக கற்பூர வகை வெற்றிலை ரகத்திற்குப் பெயர் பெற்றது. இது &nbsp;ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram