தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வனவிலங்கு மறுவாழ்வு மையம் திறப்பு; வரவேற்பு

2 Jan 2026, 3:33 pm
வனவிலங்கு மறுவாழ்வு மையம் திறப்பு; வரவேற்பு
<p><strong>வனவிலங்கு மறுவாழ்வு மையம் திறப்பு; வரவேற்பு</strong></p> <p>மேட்டுப்பாளையம், ஜன.2- தமிழகத்தில் முதல்முறையாக சிறு முகை வனப்பகுதியில் ரூபாய் 19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வனவிலங்கு மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்ற னர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச் சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை மோதூர் வனப்பகுதியில் 120 ஏக்கர் &nbsp;பரப்பளவில் ரூ.19.50 கோடி மதிப்பீட் டில் வனவிலங்கு மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள் ளது. இங்கு காயமடைந்த நோய்வாய்ப் பட்ட மற்றும் உடல் நலம் பாதிக்கப் பட்ட யானை, மான், சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகளுக்கு தேவை யான சிகிச்சைகளும், குணமாகும் வரை மறுவாழ்வு மையத்தில் வைத்து பரா மரிக்க தேவையான அனைத்து வசதி களும் செய்யப்பட்டுள்ளன. மேலும், வனவிலங்குகளுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன அறுவை சிகிச்சை அரங் கம், மருத்துவ சிகிச்சை கூடம், ஒவ் வொரு வனவிலங்கையும் தனித்தனி யாக வைத்து பராமரிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரிய மற்றும் சிறிய அளவிலான யானைகளை அடைத்து பராமரிக்கும் கரோல்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அடர்ந்த வனப்பகுதியில் இந்த சிகிச்சை மையம் அமைக்கப் பட்டுள்ளதால் பிற வனவிலங்குகள் மையத்திற்குள் நுழையாத வகையில் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டுள்ள தோடு அகழியை ஒட்டி இரு அடுக்கு களாக தொங்கு சோலார் மின்வேலி களும் அமைக்கப்பட்டுள்ளன. ஐம்பதிற் கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்க ளும் பொருத்தப்பட்டுள்ளது. காயமடைந்த நோய்வாய்ப்பட்ட மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை உள்ளிட்ட வனவிலங்குகளை மீட்கும் வகையில் ஒரு பெரிய அளவி லான மீட்பு வாகனங்கள் மற்றும் இரண்டு சிறிய அளவிலான மீட்பு வாக னம் தேவையான வசதிகளுடன் கொண்டு &nbsp;வரப்பட்டு இந்த மையத்தில் நிறுத்தி &nbsp;வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தி லேயே முதன்முறையாக அமைக்கப் பட்ட வனவிலங்கு மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் தற்போது வன &nbsp;உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை &nbsp;மையம் என பெயர் வைக்கப்பட்டுள் ளது. இம்மையத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிச.30 தேதி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த நிலையில், தமிழக அரசின் வன உயிரின காக்கும் இத்திட் டத்தை வன உயிரின ஆர்வலர்கள் பெரி தும் வரவேற்கின்றனர். போதிய மருத்து வர்கள் மருந்துகள் மற்றும் பணியாட் களை நியமித்து இம்மையத்தை தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.