உடுமலையில் வனமாக மாறிய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வனவிலங்குள் தஞ்சம்
12 Dec 2025, 3:12 pm
<p>உடுமலை, டிச.12- மக்களின் பயன்பாட்டில் இல்லாத குடியிருப்பில் காட்டுப்பன்றி, மயில் உள் ளிட்ட வன விலங்குகளும், விஷப் பாம்பு களும் தங்கும் இடமாக மாறி உள்ளது. இதனால், குடியிருப்பு பகுதியின் அரு கில் இருக்கும் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு எளிதில் வன விலங்குகள் வருவதால், சேதமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சுத்தப டுத்தி வேலி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. உடுமலை அருகே மருள்பட்டியில், கடந்த 1994 ஆம் ஆண்டில் வீட்டு வசதி வாரியத்தால் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 300 வீடுகள் கட்டப்பட் டன. ஆனால் பெயரளவிற்கு கட்டப் பட்ட வீடுகளை ஏலம் விடும் போது சிக் கல் ஏற்பட்டு, வீடுகளை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் இதர தரப்பி னர் முன்வரவில்லை. இதனால் 300 வீடுக ளும் காட்சிப்பொருளாக மாறியது. 20 ஏக் கர் பரப்பில் அமைந்த குடியிருப்பு வளா கம் முழுவதும் பராமரிப்பு இன்றி புதர் சூழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பின் கடந்த 2012 ஆம் ஆண்டு மீண்டும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை ஏலம் விட முயற்சி மேற்கொள்ளப்பட் டது. அதுவும் போதிய பலன் அளிக்க வில்லை. தற்போது இந்த இடம் பல் வேறு பகுதிகளிலிருந்து கழிவுகள் எடுத்து வந்து கொட்டப்பட்டும் இடமாக மாறி வருகிறது. மேலும், காட்டுப்பகுதி யில் இருந்து காட்டுப்பன்றி, மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நிரந்தரமாக இந்த குடியிருப்பில் தங்கி உள்ளதால், விவசாயிகளும் அருகில் உள்ள குடியி ருப்புகளில் வசிக்கும் பொது மக்களும் அச்சத்துடன் வாழ்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தின் உடுமலை தாலுகா தலைவர் பாலதண்டபாணி தெரிவிக்கையில், மருள்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை யில், புதர் மண்டி கிடக்கிறது. இங்குள்ள மயில் மற்றும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களுக்கு சென்று பயிர்களை அழித்து வருகிறது. இந்த குடியிருப்பு வழியாக தான் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டும். இரவு நேரங்க ளில் இவ்வழியாக செல்லும் மக்களை காட்டுப்பன்றிகள் தாக்கக்கூடும். எனவே வனமாக மாறியுள்ள இந்த குடியிருப்பு பகுதியை சுத்தம் செய்து வேலி அமைக்க வேண்டும். வன விலங் குகளை பிடித்து மீண்டும் வனத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை வனத்துறை மற்றும் வருவாய் துறையிடம் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டும் எவ்வித நட வடிக்கை எடுக்காமல் உள்ளனர் என் றார்.</p>
